惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
F
Fortinet All Blogs
爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
N
Netflix TechBlog - Medium
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
C
Check Point Blog
博客园 - 聂微东
D
Docker
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
aimingoo的专栏
aimingoo的专栏
Vercel News
Vercel News
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog
宝玉的分享
宝玉的分享
Jina AI
Jina AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 ஜூன் 2026
முனைவர் கே.பி.வித்யாதரன் · 2026-06-01 · via hindutamil

Updated on: 

மேஷம்: குடும்பத்தில் இருந்த காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

ரிஷபம்: வீண் குழப்பங்கள், அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. வாகனம் செலவு வைக்கும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள்.

மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப்போன காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து முடியும். தொழிலில் போட்டிகள் குறையும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

கடகம்: புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதியவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.

சிம்மம்: நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டு. விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

கன்னி: இழுபறியாக இருந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

துலாம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்து வருந்துவீர்கள். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல், அசதி, வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு: தேவையற்ற அச்சம், கவலை, மன சஞ்சலங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பல வகையிலும் பணவரவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும்.

மகரம்: புதியவர்களுடன் நட்பு மலரும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கும்பம்: தொட்ட காரியம் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்து முடியும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும். ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சில் பொறுமை தேவை.

மீனம்: யாரிடமும் பழைய கசப்பான சம்பவங்களைப் பேச வேண்டாம். உடல்நலத்தில் கவனம் தேவை. பிற்பகல் முதல் தடைகள் உடைபடும். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள்.