























கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும், லவ் ஜிஹாத், நில ஜிஹாத் ஆகியவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுவேந்து அதிகாரி, “மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். அதற்கென ஒரு குறிப்பிட்ட நடைமுறை இருக்கிறது. அதைப் பின்பற்றி சட்டம் கொண்டு வரப்படும். இந்தச் சட்டம், குஜராத், அசாம் மாநிலங்களில் உள்ள பொது சிவில் சட்டத்தைப் போல இருக்கும். மேலும், நில ஜிஹாத், லவ் ஜிஹாத், கட்டாய மதமாற்றத் தடை ஆகியவற்றுக்காகவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
முந்தைய அரசின் நோக்கங்கள் ஓட்டு வங்கி அரசியல், ஊழல், உறவினர்களுக்குச் சலுகை காட்டுதல் என்பதாக இருந்தது. தேசியவாதம், தேசபக்தி போன்றவை அவர்களின் செயல்திட்டத்தில் இருக்கவில்லை. இப்போது இங்கு தேசியவாத அரசு ஆட்சிக்கு வந்துள்ளதால், அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。