惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
博客园 - 司徒正美
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 叶小钗
The Cloudflare Blog
D
DataBreaches.Net
J
Java Code Geeks
G
Google Developers Blog
L
LangChain Blog
N
Netflix TechBlog - Medium
Stack Overflow Blog
Stack Overflow Blog
月光博客
月光博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
量子位
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
P
Proofpoint News Feed
博客园_首页
罗磊的独立博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரூ.300 கோடி வசூலைக் கடந்தது சூர்யாவின் ‘கருப்பு’
ப்ரியா · 2026-05-30 · via hindutamil

Updated on: 

சென்னை: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், இதுவரை உலகளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘கருப்பு’. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வீரபத்ருடு’ என்ற பெயரில் வெளியானது.

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வெளியான முதல் நாளிலில் இருந்தே படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களிலேயே ரூ.147 கோடி வசூலித்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் இப்படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு 25 சதவீதம் கூடுதல் வசூலைப் பெற்று, அன்றைய தினம் மட்டும் இந்தியாவில் சுமார் ரூ.6 கோடி இப்படம் வசூலித்துள்ளது. இதன் மூலம், இரண்டாவது வார இறுதியில் இப்படம் இந்தியாவில் ரூ.63.75 கோடியை அள்ளியுள்ளது. இரண்டு வாரங்களின் ஒட்டுமொத்த முடிவில், 'கருப்பு' திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபீஸில் மொத்தம் ரூ.193.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் வெறும் ரூ.7 கோடி மட்டுமே தேவைப்படும் நிலையில், நாளைய தினத்துக்குள் இந்திய அளவில் இப்படம் ரூ.200 கோடி கிளப்பில் அதிகாரபூர்வமாக இணையவுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.128 கோடி வசூலித்துள்ளது. இதில் இரண்டாவது வாரத்தின் வசூல் மட்டுமே ரூ.45.50 கோடியாகும். தமிழகத்தைத் தவிர, அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் படம் சீரான வசூலுடன் ரூ.30 கோடியை நெருங்கி வருகிறது. கர்நாடகாவில் ரூ.20 கோடியையும், கேரளாவில் ரூ.13.25 கோடியையும் கடந்து சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை இப்படம் நிகழ்த்தி வருகிறது.