
























காளி வெங்கட், ‘பூ’ ராமு உள்பட பலர் நடித்து 2023-ல் வெளியான திரைப்படம், ‘கிடா’. வரவேற்பைப் பெற்ற இப்படத்தை ரா வெங்கட் இயக்கி இருந்தார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ போன்ற படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் கே.குமார் தயாரிக்கிறார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
“மதுரை மண்ணின் இயல்பான வாழ்க்கை முறையையும், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும் பேசும் இந்தக் கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த மாதம் படப்பிடிப்பு நடைபெற உள்ளது” என படக்குழு தெரிவித்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。