惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
A
About on SuperTechFans
大猫的无限游戏
大猫的无限游戏
Engineering at Meta
Engineering at Meta
V
Visual Studio Blog
Martin Fowler
Martin Fowler
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 叶小钗
I
InfoQ
B
Blog RSS Feed
aimingoo的专栏
aimingoo的专栏
Y
Y Combinator Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
IT之家
IT之家
P
Proofpoint News Feed
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
B
Blog
MongoDB | Blog
MongoDB | Blog
人人都是产品经理
人人都是产品经理
量子位
Hugging Face - Blog
Hugging Face - Blog
月光博客
月光博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேட்டூர் அருகே காவிரி கரையில் அகழாய்வுப் பணியை தொடங்கிய த...
2026-05-22 · via hindutamil

Updated on

2 min read

மேட்டூர்: மேட்டூர் அருகே தெலுங்கனூரில் அகழாய்வு பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரிய வகை பொருட்கள் கிடைக்கும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தெலுங்கனூர் காவிரி கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025-2026-ன் படி அகழாய்வு மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டது. இந்த இடம் 1990 வரை அடர்ந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. அணை நீர்மட்டம் சரியும் போது, அப்பகுதியில் ஏராளமான புதைகுழிகளும், கல் வட்டங்கள் இருப்பதை காண முடியும். இந்த கல் வட்டங்கள் உள்ளூர் மக்களால் ‘பாண்டியன் திட்டுகள்’ என அழைக்கப்படுகின்றன.

இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில் வாள், அம்பு, முதுமக்கள் தாழி, பெரிய மற்றும் சிறிய அளவிலான பானை மற்றும் கருவிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளித்ததன் பேரில் தமிழக அரசு அப்பகுதியில் முறையான அகழாய்வு செய்ய முடிவெடுத்தது. தற்போது அணை நீர்மட்டம் சரிந்துள்ள நிலையில் அகழாய்வு பணிகளை தொல்லியல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இறந்து போனவர்களின் உடல்களை தடிமனான சுடு மண் பானைகளில் வைத்து நிலத்தில் குழி தோண்டி புதைத்து விடுவார்கள். இவை முதுமக்கள் தாழி என அழைக்கப்படுகிறது. அதில் இறந்து போனவர்களின் உடல்கள் மட்டுமின்றி அவர்கள் பயன்படுத்தி வந்த பொருட்களும் புதைக்கப்படும்.

முதுமக்கள் தாழிகளைச் சுற்றி கற்களை பதித்து வைப்பதால், கல் வட்டங்கள் (பாண்டியன் திட்டு) என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் உள்ளன. இப்பகுதியில் ஆய்வுகள் தொடங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் பல கல் வட்டங்கள் சேதமடைந்துள்ளன.

முதற்கட்டமாக 77 கல் வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 40-க்கும் மேற்பட்டவை நல்ல முறையில் உள்ளன. இதில் 10 கல் வட்டங்களை தேர்வு செய்து அகழாய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது வரை நடந்த பணியில் முதுமக்கள் தாழி, பானை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொல்லியல் துறை அதிகாரிகள் மூலம் முழுமையாக ஆய்வு செய்யும் போது கீழடி, சிவகளை போல பழமையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கனூரில் நடத்தப்படும் அகழாய்வு மூலம் சிறிய அளவிலான முதுமக்கள் தாழி, பானை இருப்பதால் எலும்புகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்கும். குறிப்பாக புதிய கற்கால மனிதர்கள் மற்றும் இரும்பு கால மனிதர்கள் வரலாறு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

எஃகு வாளால் தொடங்கிய அகழாய்வு:

மேட்டூரை அடுத்த கருங்கலூரை சேர்ந்தவரும், தொல்லியல் ஆய்வாளரான ரமேஷ் ஆராய்ச்சி படிப்பின்போது மேற்கொண்ட ஆய்வில் பெரிய அளவிலான வாள் கிடைத்துள்ளது. இதனை முழுமையாக ஆராய்ச்சி செய்த போது சுமார் 3,500 ஆண்டு பழமையானது மற்றும் எஃகு பொருளால் ஆனது என தெரியவந்தது. இதன் காரணமாக, தெலுங்கனூர் காவிரி கரையில் அகழாய்வு மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியது.