



























Updated on
:
1 min read
சென்னை: உழைப்பாளர் தினத்தை ஒட்டி, மெட்ரோ ரயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உழைப்பாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி, இன்று (1-ம் தேதி) அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7, 10, 15 நிமிட இடைவெளி
எனவே இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட பதிவு: சர்வதேச உழைப்பாளர் தினத்தை ஒட்டி, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி, இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணிவரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。