惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
G
Google Developers Blog
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
人人都是产品经理
人人都是产品经理
J
Java Code Geeks
P
Proofpoint News Feed
V
Visual Studio Blog
爱范儿
爱范儿
The Cloudflare Blog
博客园 - 叶小钗
V
V2EX
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
M
MIT News - Artificial intelligence
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 聂微东
H
Help Net Security
B
Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 【当耐特】
量子位
宝玉的分享
宝玉的分享
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து சட்ட நகலை கொளுத்தியது த...
2026-04-20 · via hindutamil

Updated on

2 min read

மேட்டூர்: “ஸ்டாலின் கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சட்ட நகலை தீயிட்டு கொளுத்தினார். கருப்புச் சட்டை போட்டு கொளுத்தினால் அது எவ்வளவு பெரிய தேசத் துரோக செயல், வேறு யாராவதாக இருந்திருந்தால் சிறையில் இருந்திருப்பார்கள்,” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து மேச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் அன்புமணி பேசியதாவது: இந்த தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல், பாட்டாளிகளுக்கு மிக முக்கியத் தேர்தல். மேட்டூர் தொகுதியில் வெற்றிபெற்றால், ஆட்சி மாற்றம் நடக்கும், முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார், இது அவசியம் நடக்க வேண்டும். கொடுங்கோல் திமுக ஆட்சியை நாம் விரட்டியடிக்க வேண்டும். அதனால் தான் இந்தக் கூட்டணியில் சேர்ந்திருக்கிறோம்.

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள். தமிழகத்தில் 5.75 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். வாக்காளர் ஒருவருக்கு ரூ.2,000 என்றால் ரூ.12,000 கோடி கொடுக்கிறார்கள். ரூ 20,000 கோடி தேர்தலுக்கு செலவு செய்கிறார்கள்.

இங்கே ஒரு துரோகி உள்ளார், அவர் தான் ஜி.கே.மணி. ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர், நமது குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கி திமுக வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஜி.கே.மணியும் அவர் பிள்ளையும், ஸ்டாலினும் அவர் மகனும் நன்றாக இருக்க வேண்டும், நாம் நன்றாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிற ஆட்சி திமுக. தமிழ்நாட்டின் தாய்மார்கள் ஒருவர்கூட திமுகவுக்கு ஓட்டு போடக்கூடாது. கலைஞர் திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு. ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. அவரை பொம்மையாக வைத்து கொண்டு, சுற்றிலும் இருப்பவர்கள் கொள்ளையடித்து கொண்டு இருந்தனர். மாற்றம் வந்தால்தான் மக்களை காப்பாற்ற முடியும். எடப்பாடி பழனிசாமி விவசாயி, முதல்வராக வந்தால்தான் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றிய திமுகவினர், ரூ.20,000 கோடியை 20 நாளில் செலவழிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொள்ளையடிப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தார், அதனைக் கெடுத்த துரோகி ஸ்டாலின்.

மத்திய அரசு 3 நாட்களுக்கு முன்பு ஒரு சட்டம் கொண்டுவந்தது. பெண்கள் படிக்க, வேலைக்குப் போக, எம்எல்ஏ, எம்.பி. ஆக வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது. ஆனால், ஸ்டாலின் அந்த சட்ட நகலை கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு தீயிட்டு கொளுத்தினார். கருப்புச் சட்டை போட்டு கொளுத்தினால் அது எவ்வளவு பெரிய தேசத் துரோக செயல், வேறு யாராக இருந்திருந்தால் சிறையில் இருந்திருப்பார்காள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

பெண்கள் முன்னேறுகின்ற சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடித்து, பட்டாசு வெடித்து ஸ்டாலின் கொண்டாடுகிறார். இந்தச் சட்டம் அமலாகியிருந்தால் 39 எம்.பி 59 ஆக உயர்ந்திருக்கு. அவ்வாறாக உயர்ந்திருந்தால் 20 பெண்கள் நாடாளுமன்றத்திற்கும், 117 பெண்கள் சட்டப்பேரவைக்கும் உறுப்பினர்களாக வர முடியும். பெண்கள் எம்எல்ஏ, எம்.பி ஆகக்கூடாது, அப்படி நடக்கக்கூடாது என்று ஸ்டாலின் வன்மத்தில் இருக்கிறார்.

ஐந்து ஆண்டு சாதனையை சொல்லி ஓட்டு கேட்பதை விட்டுவிட்டு ரூ.8,000 கூப்பன் கொடுப்பதாக சொல்லி ஓட்டு கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் குடும்பம் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்திடம் இருக்கிற பணத்தை வைத்து தமிழ்நாட்டின் பட்ஜெட்டை போட முடியும். இங்கு, திமுக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும், இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்” என்று அன்புமணி கேட்டுக்கொண்டார்.