惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
博客园_首页
量子位
T
Tailwind CSS Blog
博客园 - Franky
G
Google Developers Blog
D
DataBreaches.Net
Vercel News
Vercel News
B
Blog
Recent Announcements
Recent Announcements
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
C
Check Point Blog
有赞技术团队
有赞技术团队
Microsoft Security Blog
Microsoft Security Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதியே தொகுதி மறுசீரமைப்பு, ஏ...
வெற்றி மயிலோன் · 2026-04-16 · via hindutamil

Updated on: 

சென்னை: “தொகுதி மறுசீரமைப்பு மசோதா தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி. மத்திய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுகிறோம்’ என்ற பெயரில் தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதாவைத் தந்திரமாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறது.

மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதில் எவருக்கும் மறுப்பில்லை. 33%-க்குப் பதிலாக 50% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு 2023-ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றிவிட்டது. அதன்படி 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால், “அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் செய்து, தொகுதி மறுசீரமைப்பை முடித்த பின்பு தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரும்” என ஒன்றிய பாஜக அரசு தீர்மானித்தது. இப்போது திடுமென ‘மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப் போகிறோம்’ என அறிவித்து, அதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டியுள்ளது.

மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உண்மையிலேயே பாஜகவுக்கு அக்கறை இருந்தால் தற்போது உள்ள நாடாளுமன்ற எண்ணிக்கைக்குள்ளேயும், சட்டமன்றங்களின் எண்ணிக்கைக்குள்ளேயும் அதை வழங்கலாம். ஆனால், அதற்காக சட்டத்திருத்த மசோதா கொண்டு வருகிறோம் என்று கூறிக்கொண்டு, இந்தியா முழுவதும் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கும்; நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கும்; இதற்கென தொகுதி மறு சீரமைப்பு ஆணையம் ஒன்றை அமைப்பதற்கும் சட்ட மசோதாக்களை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் போது அடுத்ததாக 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2031-ஆம் ஆண்டில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பிறகு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த சட்டத்துக்கு மாறாக இப்போதே தொகுதி மறுசீரமைப்புச் செய்வதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது. அதற்கு அடிப்படையாக 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்துக் கொள்ளலாம் என அது முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத் தொகுதிகளை 850 ஆக உயர்த்தும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை உயரும். அது எதன் அடிப்படையில் உயர்த்தப்படும் என்பதை இதுவரை ஒன்றிய அரசு தெளிவாகக் கூறவில்லை. பாஜக அமைச்சர்கள் சொல்வதையும், தற்போது வெளியாகியுள்ள சட்ட மசோதாக்களையும் பார்க்கும்போது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் எனத் தெரிகிறது. அவ்வாறு செய்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும், ஒடிசா, மேற்கு வங்கம் முதலான மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது இருக்கும் விகிதத்தை விடக் குறையும்.

ஆனால் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் முதலான இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பின்னர் உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஒரு கட்சி அதிக எண்ணிக்கையில் இடங்களைக் கைப்பற்றினால் அது இந்தியாவையே ஆளக்கூடிய நிலை ஏற்படும். இதன் காரணமாக தென் மாநிலங்கள் முற்றிலுமாக அரசியல் செல்வாக்கை இழந்து விடும்.

இந்த ஆபத்தை கருதித்தான் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பு மாநில அரசுகளோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்தார்கள். தற்போதுள்ள விகிதத்திலேயே நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்த்தப்பட வேண்டும் என்றும், அதற்கு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொள்ளக்கூடாது என்றும் கூறி வந்தனர். ஆனால் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு இப்போது தொகுதி மறு சீரமைப்பைச் செய்வதற்கு பாஜக அரசு முடிவு எடுத்திருக்கிறது.

பாஜக அரசு தொகுதி மறு சீரமைப்பை மேற்கொண்டால் அதன் பின்னர் வடக்கு வாழும் தெற்கு தேயும். ஏற்கெனவே வரி வருவாய்ப் பகிர்விலும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதிலும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. இப்போது தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து போனால் அதன் பின்னர் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு மதிப்பும் இல்லாமல் போய்விடும். எனவே இந்த கொடிய முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதை விடுதலைச் சிறுத்தைகள் வழிமொழிகிறது. தொகுதி மறு சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 16.4. 2026 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும். கட்சி அலுவலகத்திலும், தமது வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.