









நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
Updated on:
சென்னை: “பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதல்வர் விஜய் பேசுவதில்லை. கரூர் சம்பவம் போல, பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பனையூரில் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என நினைக்கிறாரா?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சூலூரில் 10 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைை செய்தது இன்றுவரை முதல்வர் விஜய்க்கு தெரியுமா? நேற்று முன்தினம் மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, முட்புதரில் வீசியது முதல்வருக்கு தெரியுமா” நெல்லையில் மட்டும் 7 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன.
முதல்வர் விஜய் டிஃபன் கொண்டு வருகிறார்; டிஃபன் கேரியர் வைத்திருக்கிறார். டிபன் சாப்பிடுகிறார் ஆனால் பேச மாட்டார். சினிமாவில் பிரபலமாக இருப்பவர்களை அழைத்துப் பேசி, படம் எடுத்துக் கொள்வார்.
பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதல்வர் பேசுவதில்லை; பேட்டி கொடுப்பதில்லை, பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதில்லை. கரூர் சம்பவம் போல, பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பனையூரில் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என நினைக்கிறாரா விஜய்?,
ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் வர வேண்டியதன் அவசியம் என்ன?. குதிரை பேரம் நடப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் நேற்று சொல்லி இருந்தார். டிடிவி தினகரன் கட்சியிலிருந்து காமராஜை குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கினார்கள். இது குறித்து உடனே சிபிஐ விசாரித்து அவர்களை தண்டிக்க வேண்டும். அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்.
அதிமுகவிலிருந்து ஒவ்வொருவராக விலை பேசி ஆதவ் அர்ஜுனா வாங்கிக் கொண்டிருக்கிறார். குதிரை பேரும் நடைபெறுகிறது என ஊடகங்கள் தெரிவிக்க வேண்டும். எல்லா நாளும் ஒரே நாள் போல இருக்காது; வருங்காலம் பாஜகவின் காலமாக இருக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。