惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
Recent Announcements
Recent Announcements
G
Google Developers Blog
I
InfoQ
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Google DeepMind News
Google DeepMind News
P
Proofpoint News Feed
MyScale Blog
MyScale Blog
M
MIT News - Artificial intelligence
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
C
Check Point Blog
J
Java Code Geeks
T
Tailwind CSS Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Microsoft Security Blog
Microsoft Security Blog
MongoDB | Blog
MongoDB | Blog
V
Visual Studio Blog
人人都是产品经理
人人都是产品经理
量子位
A
About on SuperTechFans
D
DataBreaches.Net
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எதிர்க்கட்ச...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில், அவற்றுக்கு அமைச்சர்கள் பலர் அளித்த பதிலால் பேரவையில் நேற்று விவாதம் அனல் பறந்தது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் வருமாறு:

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: ஆளுநர் உரை தொடங்கும் போது, இதுவரை கடைபிடிக்கப்பட்ட மரபை மீறி தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது. இதேபோல் எங்கள் ஆட்சியிலும் ஆளுநர் வலியுறுத்தினார்.

ஆனால் எங்கள் தலைவர் உறுதியாக இருந்தார். சட்டப்பேரவை நமது எல்லை. ஆனால் இந்த இடத்தை ஆளுநரிடம் வழங்கும் வகையில் என்ன ‘காம்ப்ரமைஸ்’ நடந்தது என மக்கள் கேட்கிறார்கள். பேரவைத் தலைவர்

ஜேசிடி பிரபாகர்: தாய்த்தமிழ்தான் எங்களுக்கு அடிப்படை. தேசிய கீதத்தை 2 முறை பாடியதில் எந்த தவறும் இல்லை.

உதயநிதி: தேசிய கீதத்தை 2 முறை பாடவைத்த நீங்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை 2 முறை பாட வைத்தீர்களா?

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: எங்கள் முதல்வருக்கு உயிர் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம். ஆளுநருடன் எந்தவிதமாக காம்ப்ரமைசும் எங்களுக்கு கிடையாது.

உதயநிதி: மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். வேளாண் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.

தமிழகத்தில் மாதத்தில் 200-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், அதில் 100-க்க ம் மேற்பட்டவை சிறுமிகள் மீதான வன்கொடுமைகள். இதனால் நாம் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறோமா என சந்தேகம் வருகிறது.

சிங்கப்பெண் படையினர் குற்றவாளிகளைப் பிடிக்காமல், ரீல்ஸ் எடுத்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் பதிவான குற்றங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே கைதாகியுள்ளனர். தூத்துக்குடியில் ஆளுங்கட்சியை சேர்ந்த அப்பாவி பெண்ணை, அதே கட்சியினர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் சொல்லி தான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், எல்லா மேலிடத்துக்கும் தெரியும் என்றும், அமைச்சர்கள், 2-ம் கட்ட தலைவர்களிடமும் தெரிவித்ததாக வும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். யார் அந்த மேலிடம்? குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.

ஆதவ் அர்ஜூனா: திமுக ஆட்சியில் 2023-ல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. 6 மாதத்தில் பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் நேர்மையான ஆட்சியை முதல்வர் வழங்குவார்.

உதயநிதி: தவெக அரசின் முன்பு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இதையெல்லாம் தீர்க்க முயற்சிக்காமல், அடுத்த கட்சி ஆட்களை இழுக்கும் வேலையைத்தான் நீங்கள் முழு வீச்சில் செய்து வருகிறீர்கள். ஆள் பிடிக்கும் நிர்வாகத்தை விட்டு, ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.2500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், தாய்மாமன் சீர் போன்ற திட்டங்களை 6 மாதங்களில் செயல்படுத்துவீர்கள் என நம்புகிறோம். அதை எப்படி செயல்படுத்துவீர்கள் என முதல்வர் பதில் அளிக்க வேண்டும். தவெகவினர் அரசுப் பள்ளிகளில் குத்து பாடல்களை போட்டு நடனம் ஆடுவதை தடுக்க வேண்டும்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்: அரசு பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.