惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
I
InfoQ
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 【当耐特】
小众软件
小众软件
B
Blog RSS Feed
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 三生石上(FineUI控件)
Engineering at Meta
Engineering at Meta
人人都是产品经理
人人都是产品经理
Microsoft Security Blog
Microsoft Security Blog
Last Week in AI
Last Week in AI
H
Help Net Security
爱范儿
爱范儿
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 司徒正美
Y
Y Combinator Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
GbyAI
GbyAI
Google DeepMind News
Google DeepMind News
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மும்பையில் பருவமழை தீவிரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போ...
வேட்டையன் · 2026-06-22 · via hindutamil

Updated on: 

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் மும்பையில் இன்று (ஜூன் 22) காலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதன், காரணமாக நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மும்பை நகரில் பருவமழை தீவிரமாக இருக்கும். நடப்பு ஆண்டில் பருவமழை சற்று தாமாதமாக அங்கு தொடங்கியது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டதாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில் மும்பையில் இன்று காலை கனமழை பதிவானது. இடி, மின்னலுடன் கூடிய இந்த மழையின் போது மணிக்கு 30 முதல் 40 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் மழைப் பொழிவு மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (திங்கட்கிழமை) வாரத்தின் முதல் நாள் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் மற்றும் பணிக்கு சென்ற மக்கள் என அனைவரது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. மழை பொழிவு மும்பை நகரில் பரவலாக பதிவானது. மழை சற்று குறைந்த பின்னர் சாலையில் தேங்கிய மழை நீர் காரணமாக போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அந்த சாலையில் மழை நீர் தேங்கியதோடு சரக்கு வாகனம் ஒன்றும் விபத்தில் சிக்கியது போக்குவரத்து பாதிப்பை தீவிரமாக்கியது. மழை காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் தேங்கியது. அந்தேரி, பாந்த்ரா உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

மும்பை மழை குறித்த பதிவுகள் சமூக வலைதளத்தில் வைரலாக பயனர்கள் மத்தியில் பேசப்பட்டது. அதில் மழை, காற்றின் வேகம், சாலையில் தேங்கிய மழை நீர் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. மும்பையில் வரும் நாட்களில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.