惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
B
Blog
N
Netflix TechBlog - Medium
量子位
月光博客
月光博客
博客园_首页
博客园 - Franky
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
T
The Blog of Author Tim Ferriss
Hugging Face - Blog
Hugging Face - Blog
雷峰网
雷峰网
M
MIT News - Artificial intelligence
J
Java Code Geeks
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
腾讯CDC
Engineering at Meta
Engineering at Meta
云风的 BLOG
云风的 BLOG
L
LangChain Blog
GbyAI
GbyAI
IT之家
IT之家
Y
Y Combinator Blog
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கொச்சி - தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் அமைக்கு...
2026-05-02 · via hindutamil

Updated on

2 min read

தூத்​துக்​குடி: கொச்​சி- தூத்​துக்​குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் அமைக்க இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனத்​துக்கு அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் தூத்​துக்​குடி பகு​தி​யில் உள்ள தொழிற்​சாலைகள் இயற்கை எரி​வா​யுக்கு மாறு​வதுடன், தென்​மாவட்​டங்​களில் வீடு​களுக்கு குழாய் மூலம் தடை​யின்றி இயற்கை எரி​வாயு வழங்க வழி​வகை ஏற்​பட்​டுள்​ளது.

நாட்​டில் பெரு நகரங்​களில் மட்​டும் வீடு​களுக்கு குழாய் மூலம் இயற்கை எரி​வாயு (பிஎன்​ஜி) விநி​யோகம் செய்​யும் திட்​டம் தற்​போது நடை​முறை​யில் உள்​ளது. இந்த திட்​டத்தை நாடு முழு​வதும் விரி​வாக்​கம் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

அதற்​கான பணி​களை மத்​திய பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகம் மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக கொச்சி முதல் தூத்​துக்​குடி வரை கன்​னி​யாகுமரி வழி​யாக இயற்கை எரி​வாயு குழாய் அமைக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​பட​வுள்​ளது.

இந்த திட்​டத்தை செயல்​படுத்த இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனத்​துக்கு (ஐஓசிஎல்) மத்​திய பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு ஒழுங்​கு​முறை வாரி​யம் கடந்த சில நாட்​களுக்கு முன்பு அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

கொச்​சி- கன்​னி​யாகுமரி- தூத்​துக்​குடி இயற்கை எரி​வாயு குழாய் திட்​டம் (கேடிபிஎல்) மூலம் கொச்​சி​யில் அமைந்​துள்ள திரவ இயற்கை எரி​வாயு முனை​யத்​தில் (எல்​என்​ஜி) இருந்​து, தூத்​துக்​குடி வரை 425 கி.மீ. தொலை​வுக்கு குழாய் அமைக்​கப்​படு​கிறது.

இந்த திட்​டம், தின​மும் 6.84 மில்​லியன் மெட்​ரிக் ஸ்டாண்​டர்டு கியூபிக் மீட்​டர் (எம்​எம்​எஸ்​சிஎம்​டி) இயற்கை எரி​வாயு கொண்டு வரும் திறனுடன் செயல்​படுத்​தப்​படு​கிறது. இந்த திட்​டத்தை வடிவ​மைத்​தல், செயல்​படுத்​துதல், விரி​வாக்​கம் செய்​தல் ஆகிய​வற்றை இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனம் மேற்​கொள்​ளும்.

பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு ஒழுங்​கு​முறை வாரி​யத்​தின் அனு​ம​தியை தொடர்ந்து திட்​டத்​துக்​கான விரி​வான பொறி​யியல் ஆய்​வு​கள், வழித்தட ஆய்​வு​கள் போன்​றவை விரை​வில் தொடங்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த திட்​டத்தை வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் முடித்து பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இருப்​பினும் அடுத்​தடுத்த பணி​களின் சூழ்​நிலைகளை பொறுத்து இது அமை​யும் என இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனத்​தின் சார்​பில் ராம​நாத​புரம் - தூத்​துக்​குடி இடையே​யான இயற்கை எரி​வாயு குழாய் திட்​டம் ஏற்​க​னவே செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த திட்​டத்​தின் கீழ் ராம​நாத​புரத்​தில் இருந்து குழாய் மூலம் இயற்கை எரி​வாயு தூத்​துக்​குடிக்கு கொண்​டு​வரப்​படு​கிறது.

இந்த திட்​டத்​தின் மூலம் தூத்​துக்​குடி ஸ்பிக் ஆலை மற்​றும் அதை சுற்​றி​யுள்ள குடி​யிருப்​பு​களுக்கு குழாய் மூலம் இயற்கை எரி​வாயு விநி​யோகம் செய்​யப்​பட்டு வரு​கிறது. மேலும், தூத்​துக்​குடி நகர் பகுதி முழு​வதும் வீடு​களுக்கு குழாய் மூலம் இயற்கை எரி​வாயு விநி​யோகம் செய்​வதற்​கான கட்​டமைப்பு வசதி​களை இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனம் செய்து வரு​கிறது.

இதே​போல், தூத்​துக்​குடி​யில் இருந்து திருநெல்​வேலிக்கு குழாய் மூலம் இயற்கை எரி​வா​யுவை கொண்டு செல்​வதற்​கான குழாய் பதிக்​கும் பணி​களும் போர்க்​கால அடிப்​படை​யில் நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த சூழ்​நிலை​யில் கொச்​சி-கன்​னி​யாகுமரி- தூத்​துக்​குடி இயற்கை எரி​வாயு குழாய் திட்​டம் செயல்​படுத்​தப்​பட​வுள்​ளது. இதன் மூலம் தூத்​துக்​குடி மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள தொழிற்​சாலைகள் அனைத்​தும் பர்​னஸ் ஆயில் மற்​றும் நிலக்​கரி போன்ற எரிபொருளில் இருந்து இயற்கை எரி​வா​யுக்கு மாறும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இதனால், கார்​பன் வெளி​யீடு குறைந்து சுற்​றுச்​சூழல் பாதிப்​பு​கள் குறை​யும். அது​போல, தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி போன்ற தென்​மாவட்​டங்​களில் வீடு​களுக்கு குழாய் மூலம் இயற்கை எரி​வாயு விநி​யோகம் செய்​யும் திட்​டத்தை விரை​வாக செயல்​படுத்​தும் வாய்ப்​பும் ஏற்​பட்​டுள்​ள​தாக இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வன அதி​காரி​கள் தெரி​வித்​தனர். மத்​திய பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகத்​தின்​ இந்​த முயற்​சி​யை தூத்​துக்​குடி தொழில்​துறையினர் வரவேற்றுள்ளனர்.