惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
P
Proofpoint News Feed
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog
F
Fortinet All Blogs
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
C
Check Point Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
aimingoo的专栏
aimingoo的专栏
月光博客
月光博客
美团技术团队
D
Docker
博客园 - Franky
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 【当耐特】
罗磊的独立博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
குறைந்து வரும் வரதட்சணைக் கொடுமை மரணங்கள் - 90 நிமிடங்களு...
2026-05-23 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: மத்​தி​யப் பிரதேச மாநிலம் போபாலில் ட்விஷா சர்மா என்​பவரும், கிரேட்​டர் நொய்​டா​வில் தீபிகா நகர் என்​பவரும் அண்​மை​யில் அடுத்தடுத்து மரணம்அடைந்த சம்​பவங்​கள், இந்​தி​யா​வில் இன்​னும் தொடர்ந்து வரும் வரதட்சணைக் கொடுமை​களை எடுத்​துக்காட்டின.

இவை ஏதோ தற்​செய​லாக நடந்த தனிப்​பட்ட சம்​பவங்​கள் அல்ல, பல ஆண்​டு​களாகத் தொடரும் அவல​மான பின்​னணி​யின் ஒரு பகு​தியே என்​றும் அதி​காரப்​பூர்​வத் தரவு​கள் நமக்கு வெளிப்​படுத்​துகின்​றன.

தேசிய குற்ற ஆவணக் காப்​பகம் (என்​சிஆர்​பி) வெளி​யிட்​டுள்ள தரவு​களின்​படி, கடந்த 2024-ம் ஆண்​டில் மட்​டும் இந்​தி​யா​வில் 5,737 வரதட்​சணை மரணங்​கள் பதிவாகியுள்ளன.

இது முந்​தைய ஆண்​டு​களு​டன் ஒப்​பிடு​கை​யில் சற்றே சரிவைக் காட்​டினாலும், இப்​பிரச்​சினை​யின் தீவிரத்தை உணர்த்​து​வதற்கு இந்த எண்​ணிக்​கையே போது​மான​தாக உள்​ளது.

கடந்த பத்​தாண்​டு ​காலத் தரவு​களை உற்​று​நோக்​கி​னால், வரதட்சணை மரணங்​களின் எண்​ணிக்கை படிப்​படி​யாகக் குறைந்து வரு​கிறது. 2015-ம் ஆண்​டில் 7,634 ஆக இருந்த மரணங்களின் எண்​ணிக்​கை, 2024-ல் 5,737 ஆகக் குறைந்​துள்​ளது.

இந்த பத்​தாண்​டு​களில் 1,900 மரணங்​கள் குறைந்​துள்ள நிலை சற்றே ஆறு​தல் அளித்​தா​லும், தற்​போதைய புள்​ளி​ விவரங்​களின்​படி நாட்​டில் நாளொன்​றுக்கு சராசரி​யாக 15-க்​கும் மேற்​பட்ட பெண்​கள் வரதட்​சணைக் கொடுமை​யால் உயி​ரிழப்​பது வெளிச்​சத்​திற்கு வந்​துள்​ளது.

அதாவது, ஒவ்​வொரு 90 நிமிடத்​துக்​கும் ஒரு பெண் வரதட்​சணை கொடுமை​யால் உயி​ரிழக்​கிறார். இது இந்த சமூக அவலம் இன்​னும் வீரி​யத்​துடனேயே நீடிக்​கிறது என்​பதை இது உணர்த்​து​வ​தாக அமைந்​து உள்​ளது.

வரதட்​சணைக் கொடுமை மரணங்​களைப் பொருத்​து​வரை​யில் நாடு முழு​வதும் சீராக இல்​லை; மாறாக, குறிப்​பிட்ட சில மாநிலங்​களி​லேயே மிக அதிக அளவில் பதி​வாகி​யுள்​ளன.

குறிப்​பாக, உத்தர பிரதேச மாநிலத்தில் மட்​டும் கடந்த 2024-ல் 2,038 மரணங்​கள் பதிவாகி​யுள்​ளன. இது நாட்​டின் ஒட்​டுமொத்த வரதட்​சணை மரணங்​களில் மூன்​றில் ஒரு பங்​கிற்​கும் அதி​க​மாகும்.

இதற்கு அடுத்​த​படி​யாக பீகாரில் 1,078 மரணங்​களும், மத்​தி​யப் பிரதேசத்​தில் 450 மரணங்​களும் பதி​வாகி​யுள்​ளன. ராஜஸ்​தான் (386), மேற்கு வங்​கம் (337) ஆகிய மாநிலங்​களும் இந்த வரிசை​யில் முன்​னிலை​யில் உள்​ளன.

குறிப்​பிட்ட சில மாநிலங்​களில் மட்​டும் இந்த வழக்​கு​கள் அதி​கள​வில் குவிந்​திருப்​பது, அங்கு வரதட்​சணைக் கொடுமை என்​பது இன்​னும் சமூகத்​தில் ஆழமாக வேரூன்​றி​யிருப்​ப​தைக் காட்​டு​கிறது.

வரதட்​சணைக் கொடுமை​யால் ஏற்​படும் மரணங்​களில், மன உளைச்​சல் மற்​றும் சித்​திர​வதை காரண​மாக நிகழும் தற்​கொலைகளும், பிற சந்​தேகத்​திற்​குரிய மர ணங்​களும் அடங்​கும்.

அதே வேளை​யில், வரதட்​சணைப் ​கொலைகள் எனப்​படும் நேரடி வன்​முறை மரணங்​களை​யும் தேசிய குற்ற ஆவணக்காப்​பகத் தரவு​கள் அப்​பட்​ட​மாக்​கி​யுள்​ளன. அதன்​படி, 2024-ல் மேற்கு வங்​கத்​தில் 163 படுகொலைகளும், ஒடி​சா​வில் 161 படு​கொலைகளும் நிகழ்ந்​துள்​ளன.

ராஜஸ்​தானில் 75, பீகாரில் 66 மற்​றும் உத்தர பிரதேசத்​தில் 58 சம்​பவங்​கள் பதி​வாகி​யுள்​ளன. வரதட்​சணைத் தகராறுகள் எவ்​வாறு ஒரு பெண்​ணின் நேரடிப் படு​கொலை​யில் முடிகின்​றன என்​ப​தற்​கு இந்​த எண்​களே சாட்​சி​யாக உள்​ளன.