
























Updated on
:
1 min read
சிவகாசி: செஸ் வீரர்களுக்கான ஃபிடே உலக தரவரிசையில் 7-ம் இடத்தில் உள்ள ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி உள்ள தமிழகத்தை சேர்ந்த எட்டு வயதான தமிழ் அமுதன்.
வெள்ளிக்கிழமை அன்று ஆன்லைனில் நடைபெற்ற ‘ஃப்ரீஸ்டைல் Friday’ வாராந்திர செஸ் ஆட்டத்தில் தமிழ் அமுதன் பங்கேற்றார். கடந்த பிப்ரவரியில் கேண்டிடேட் மாஸ்டர் பட்டம் பெற்றார். அதன் பின்னர்தான் ஃபிடே தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2,000 Elo புள்ளிகளை கடந்த இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அவர் ஆன்லைனில் செஸ் போட்டிகளில் விளையாடுவது வழக்கமான ஒன்று. அதுபோலவே சென்ற வெள்ளிக்கிழமை (மே 1) அன்றும் ‘ஃப்ரீஸ்டைல் Friday’-வில் பங்கேற்றுள்ளார். அப்போது சிவகாசியில் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் லேப்டாப் உடன் அவர் போட்டியில் பங்கேற்றார். அவர்தான் விளையாடுகிறார் என்பதை உறுதி செய்ய மெழுகுவர்த்தி ஒன்று ஏற்றப்பட்டது. அந்த ஒளியை கொண்டு விளையாடுவது தமிழ் அமுதன் என்பதை நடுவர்கள் உறுதி செய்தனர்.
அதில் கருப்பு நிற காய்களுடன் தமிழ் அமுதன் விளையாடினர். இதில் தான் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை ஒரு சுற்றில் எதிர்கொண்டு வீழ்த்தினார். இந்த போட்டி மொத்தம் 11 சுற்றுகள் கொண்டதாக இருந்தது. இருப்பினும் லேப்டாப்பில் சார்ஜ் இல்லாத காரணத்தால் 4 சுற்றுகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி அவருக்கு கிளாசிக்கல் செஸ் தொடர்களில் விளையாட நம்பிக்கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。