惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
WordPress大学
WordPress大学
博客园_首页
罗磊的独立博客
D
Docker
N
Netflix TechBlog - Medium
博客园 - Franky
Hugging Face - Blog
Hugging Face - Blog
D
DataBreaches.Net
I
InfoQ
L
LangChain Blog
GbyAI
GbyAI
V
V2EX
博客园 - 聂微东
P
Proofpoint News Feed
博客园 - 【当耐特】
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
量子位
Martin Fowler
Martin Fowler
有赞技术团队
有赞技术团队
U
Unit 42
博客园 - 司徒正美
大猫的无限游戏
大猫的无限游戏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நக்சலைட்கள் மிரட்டிப் பறித்த பணத்தில் சென்னையில் மருத்துவ...
ஆர்.ஷபிமுன்னா · 2026-05-31 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: நக்சலைட்​கள் மிரட்​டிப் பறித்த பணத்​தில் பெண் ஒரு​வர் சென்​னை​யின் பிரபல தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் முடித்​துள்​ளார். இதில் கட்​ட​ண​மாக ரூ.1.31 கோடி செலுத்​தப்​பட்​டுள்​ள​தாக பிஹார் நீதி​மன்​றத்​தில் என்ஐஏ தெரிவித்துள்ளது.

பிஹாரின் மகத மண்​டலப் பகு​தி​யில் தடை செய்​யப்​பட்ட நக்​சலைட் இயக்​க​மான சிபிஐ (மாவோ​யிஸ்ட்) செயல்​பட்டு வந்​தது. அப்​போது அமைப்​பின் விரி​வாக்​கம் உள்​ளிட்ட காரணங்​களுக்​காக பிஹார் மற்​றும் ஜார்க்​கண்ட் அரசு ஒப்​பந்​த​தா​ரர்​கள் மற்​றும் கட்​டு​மான நிறு​வனங்​களை மிரட்டி பணம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்கை என்ஐஏ விசா​ரித்து வரு​கிறது. இதில் மிரட்​டிப் பறித்த பணத்​தைப் பயன்​படுத்​தி, மாவோ​யிஸ்ட் ஒரு​வர் தனது தங்​கையை சென்​னை​யில் உள்ள செட்​டி​நாடு மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் எம்​பிபிஎஸ் படிக்க வைத்​தது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

சிபிஐ மாவோ​யிஸ்ட் அமைப்​பினர் பிஹார் மற்​றும் ஜார்க்​கண்ட் சிறப்​புப் பகு​திக் குழு​வின் உறுப்​பினர் பிரத்​யுமன் சர்​மா. இவர் தத்து எடுத்து வளர்த்த மகனாக தருண் குமாரும் ஒரு நக்​சலைட் ஆவார். இந்த தருண் குமாரின் சகோ​தரி பூஜா குமாரி, தமிழ்​நாட்​டின் ஒரு சிறந்த மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் படிக்க விரும்​பி​யுள்​ளார். ஆனால் அதற்​கானக் கட்​ட​ணத் தொகை அவர்​களிடம் இல்​லை. இதை பிரத்​யுமனிடம் தருண் குமார் கூறி​யுள்​ளார். இதையடுத்து பிரத்​யுமன், நக்​சலைட் அமைப்​பின் பெயரில் பலரிடம் மிரட்​டிப் பறித்த பணத்​தில் ரூ.1.31 கோடி அளித்​துள்​ளார். இந்​தப் பணத்​தில் பூஜா குமாரி, கடந்த 2017-2022 கல்​வி​யாண்​டில் எம்​பிபிஎஸ் முடித்​துள்​ளார்.

இந்த சம்​பவத்​தில் பிஹார் உயர் நீதி​மன்​றத்​தில் என்ஐஏ ஒரு பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்​துள்​ளது. இதில், சம்​பவத்தை விளக்​கிய என்​ஐஏ, சென்​னை​யின் மருத்​து​வக் கல்​லூரிக்கு செலுத்​தப்​பட்ட தொகை​யில் ரூ.1,13,70,500 முடக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரி​வித்​துள்​ளது.

விசா​ரணை​யில் சிக்​காமல் இருக்க, மருத்​து​வக் கல்​லூரிக்​கான தொகையை நேரடி​யாக செலுத்​தாமல் இடைத்​தரகர்​கள் அல்​லது உதவி​யாளர்​களின் வங்​கிக் கணக்​கு​கள் மூலம் செலுத்​தப்​பட்​டுள்​ள​தாக என்ஐஏ தெரி​வித்​துள்​ளது.

தருண் குமார், மகத பிராந்​தி​யத்​தில் சிபிஐ மாவோ​யிஸ்ட் அமைப்பை மீண்​டும் நிலைநிறுத்​து​வ​தில் ஒரு முக்​கிய இணைப்​பாகச் செயல்​பட்​டுள்​ளார். பிஹார் மற்​றும் ஜார்க்​கண்​டின் மகத மண்​டலத்​தில், மாவோ​யிஸ்ட்​களுக்​கும் பிற குழுக்​களுக்​கும் இடையே ஒரு முக்​கிய பால​மாக பணி​யாற்​றி​னார். கைதாகி உள்ள இவரைப் பற்​றிய தகவல்​கள், என்​ஐஏ-​வால் பாது​காக்​கப்​பட்ட சாட்​சி​யங்​கள் அளித்​த வாக்​குமூலங்​களில்​ தெரியவந்​துள்​ளது.