

























தமிழில் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட படங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானது.
ஆர்.பி.சவுத்ரியின் மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர் நடிகர்களாக சினிமா படங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த 1980-களில் அவரது திரைப்பட தயாரிப்பு பணியை அவர் தொடங்கினார். சுமார் 40+ ஆண்டுகள் திரைத்துறையில் அனுபவம் கொண்டவர். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை அவரது சினிமா தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。