


























Updated on
:
1 min read
நடிகர் கவின் “ஹாய்” என்ற படத்தில் நயன்தாராவுடன் நடித்துள்ளார். விஷ்ணு எடவன் இயக்கும் இதில் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அடுத்து கவினின் 11-வது திரைப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்தனன் தயாரிக்கிறார்.
இப்படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரம சிவன் இயக்குகிறார்.
காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள கவின் இப்படத்தில் குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்கிறார்.
சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்குகிறது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。