惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
G
Google Developers Blog
人人都是产品经理
人人都是产品经理
U
Unit 42
爱范儿
爱范儿
Hugging Face - Blog
Hugging Face - Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
B
Blog RSS Feed
The Cloudflare Blog
D
Docker
A
About on SuperTechFans
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Y
Y Combinator Blog
月光博客
月光博客
云风的 BLOG
云风的 BLOG
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
Google DeepMind News
Google DeepMind News
The GitHub Blog
The GitHub Blog
博客园_首页
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம்: சிபிஐ விசாரணை கோ...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து நீதி​மன்ற கண்​காணிப்​புடன் கூடிய சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும் எனறு உச்ச நீதி​மன்​ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்​பட்​டுள்​ளது.

உத்​தர பிரதேச மாநிலம் அயோத்​தி​யின் ஸ்ரீராம ஜென்​ம பூமி கோயி​லில் காணிக்கை பணம் திருடப்​பட்ட விவ​காரம் இப்​போது உச்ச நீதி​மன்​றத்தை எட்​டி​யுள்​ளது. இது குறித்து தலைமை நீதிபதி சூர்​ய​காந்​துக்கு அனுப் பிர​காஷ் அவஸ்தி என்ற வழக்​கறிஞர் நேற்று இ-மெயில் மூலம் 4 பக்க கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளார். புகார் குறித்து எப்​ஐஆர் பதிவு செய்​ய​வும் உச்ச நீதி​மன்ற மேற்​பார்​வை​யில் சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட​வும் கோரி​யுள்​ளார்.

மேலும், “இது கோடிக்​கணக்​கான பக்​தர்​களின் நம்​பிக்​கை​யுடன் தொடர்​புடைய விவ​காரம். கோயி​லின் காணிக்கை கையாடல், தவறாகப் பயன்​படுத்​தப்​பட்​டது அல்​லது காணா​மல் போனது போன்ற சமீபத்​திய செய்​தி​கள், உள்​நாட்​டிலும் வெளி​நாட்​டிலும் உள்ள பக்​தர்​களிடையே கவலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. உ.பி. அரசால் அமைக்​கப்​பட்ட சிறப்பு புல​னாய்​வுக் குழு போதுமானதாக இல்​லை. இந்த விவ​காரத்​தில் இன்​னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட​வில்​லை.

விலை ம​திப்​பற்ற சேவை​யாற்​றும் ராமர் கோயில் அறக்​கட்​டளை மீது களங்​கம் கற்​பிக்​கும் நோக்​கம் எனக்கு இல்​லை. இருப்​பினும், புகாரின் தீவிரத்​ தன்மை கருதி விசா​ரணை​யில் அதிக வெளிப்படைத் ​தன்​மை​யும் நம்​பகத்​தன்​மை​யும் தேவைப்படுகிறது. எனவே, உச்ச நீதி​மன்​றத்​தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்​தர​விட வேண்​டும்" என்று கூறி​யுள்​ளார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து தலைமை நீதிபதி விரைவில் முடிவெடுப்பார்.

ஸ்ரீராம ஜென்​ம பூமி கோயி​லில் இருந்து சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான காணிக்கை திருடப்​பட்​ட​தாக தகவல்​கள் வெளியாகி உள்​ளன. கோயி​லின் காணிக்கை தொகையை 50 ஊழியர்​கள் ஒரு குளிரூட்​டப்​பட்ட அறை​யில் அன்​றாடம் எண்ணுகின்​றனர். இவர்​களில் 24 ஊழியர்​கள் பணத்​தாள்​களை எண்ணி கட்​டு​களாக கட்​டும் பணி​யைச் செய்​கின்​றனர். இந்த ஊழியர்​களை, கோயில் அறக்​கட்​டளை ஒரு தனி​யார் நிறு​வனம் மூல​மாகப் பணி​யமர்த்​தி​யுள்​ளது.

பணத்தை எண்​ணும் அந்த 24 ஊழியர்​களின் பணி​களை அறக்கட்டளை​யைச் சேர்ந்த 12 ஊழியர்​கள் கண்காணிக்கின்றனர். தற்​போது, அந்த ஊழியர்​கள் மற்​றும் அவர்களைப் பணி​யமர்த்​திய அறக்​கட்​டளை ஆகிய அனைத்​தும் சந்​தேக வளை​யத்​துக்​குள் கொண்​டு​வரப்​பட்டு விசா​ரணை நடைபெற்று வரு​கிறது. இதற்​காக, உ.பி. அரசு அமர்த்​திய 3 பேர் கொண்ட சிறப்பு புல​னாய்​வுக் குழு நேற்​று முன்​தினம்​ மாலை அயோத்​தி வந்​தடைந்​தது.