




















Updated on
:
1 min read
விசில் பார்ட்டிக்கு ஆதரவளிக்கும் விஷயத்தில் சிறுத்தை தலைவருக்கு கட்சிக்குள் ஏகப்பட்ட நெருக்கடியாம். வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, வாக்குப் பதிவு கணக்குகளை சரிபார்த்த சிறுத்தை நிர்வாகிகளுக்கு பெருத்த ஷாக்காம். காரணம், கடந்த முறை சிறுத்தை கட்சிக்கு வாக்களித்தவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் இம்முறை விசிலை எடுத்து ஊதி இருக்கிறார்களாம்.
இதைச் சுட்டிக்காட்டி பெருவாரியான நிர்வாகிகள், “விசில் பார்ட்டிக்கே ஆதரவை தந்துவிடுங்கள்” என தலைவருக்கே போன் போட்டுச் சொன்னர்களாம். இவர்களில் சிலர் விசில் கட்சி தரப்புடன் நேரடியாகவே தொடர்பு கொண்டும் பேசினார்களாம்.
இதேபோல், விசில் பார்ட்டிக்கு ‘முகம்’ காட்டிய இலைக் கட்சியின் முன்னாள் மாண்புமிகுவும் தன் வசம் 12 எம்எல்ஏ-க்கள் இருப்பதாகச் சொல்லி பேரம் பேசினாராம். துணை முதல்வர் பதவியை தனக்கு தருவதுடன் மற்றவர்களுக்கான தேர்தல் ‘செலவு தொகையை’ தர வேண்டும் என்று அவர் வைத்த ‘டிமாண்டுகளை’ கேட்டு மிரண்டுவிட்டதாம் விசில் பார்ட்டி. அவர் கேட்டதை தந்துவிடலாமே என விசில் பார்ட்டியின் ‘குலுக்கல் மாப்பிள்ளை’ குறுக்கு யோசனை சொன்னாராம்.
ஆனால், “அப்படியெல்லாம் ‘கேட்டதை’ கொடுத்து ஆட்சியமைத்து அசிங்கப்பட வேண்டாம். ஜனநாயக ரீதியில் முயற்சி செய்வோம். முடியாவிட்டால் இன்னொரு தேர்தலை சந்திக்கவும் தயாராய் இருப்போம். அப்படி நடந்தால் 200 தொகுதிகளுக்கு மேல் நாம் வாகை சூடுவோம்” என தெளிவாகச் சொல்லிவிட்டாராம் விசில் தலைவர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。