惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
T
Tailwind CSS Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
L
LangChain Blog
博客园 - 【当耐特】
I
InfoQ
腾讯CDC
人人都是产品经理
人人都是产品经理
H
Help Net Security
Y
Y Combinator Blog
B
Blog
博客园 - Franky
Microsoft Security Blog
Microsoft Security Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
The Cloudflare Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 叶小钗
D
Docker
博客园 - 聂微东
B
Blog RSS Feed
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பாக். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம்: உ....
இரா.வினோத் · 2026-06-25 · via hindutamil

Updated on: 

பெங்களூரு: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கர்நாடகாவில் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் சுஹைல் (20). கூலி தொழிலாளியான‌ இவர் கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹரிஹராவில் பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் வாட்ஸ் - அப் செயலி மூலம் தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

வாட்ஸ்- அப்பில் பயங்கரவாத அமைப்பினருடன் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக உரையாடியதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரது நடவடிக்கையை கண்காணித்துள்ளனர். அதில் சந்தேகத்துக்கு இடமான உரையாடல்கள், தொழில் நுட்ப ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாவணகெரே போலீஸாரின் உதவியுடன் சுஹலை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதனிடையே, நேற்று காலையில் ஹரிஹராவில் உள்ள வீட்டில் இருந்த சுஹலை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 1 செல்போன், 2 சிம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விடுத்துள்ள அறிக்கையில், ”பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளோடு சமூக வலைத் தளம் மூலம் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 4-ம் தேதி கர்நாடகாவில் துமக்கூரு, தாவணகெரே ஆகிய இடங்களில் 2 பேர் இதே போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் தற்போது கைதான நபருக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.