惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
G
Google Developers Blog
博客园 - 司徒正美
J
Java Code Geeks
aimingoo的专栏
aimingoo的专栏
A
About on SuperTechFans
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
T
The Blog of Author Tim Ferriss
D
Docker
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
腾讯CDC
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
Jina AI
Jina AI
I
InfoQ
雷峰网
雷峰网
The Cloudflare Blog
美团技术团队
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நகரமயமாதல் மட்டும்தான் வளர்ச்சியா?
2026-04-30 · via hindutamil
குருசரவணன்.ம

Updated on

3 min read

அண்மையில் வெளியான 16ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை, பல புதிய அணுகுமுறைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக, நகரமயமாதலை (Urbanisation) வேகப்படுத்தும் நோக்கத்துடன் சில ஊக்குவிப்புக் கருத்துகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நகரமயமாதல் குறித்த அளவுகடந்த அக்கறை, சமநிலையற்ற வளர்ச்சிக்கான பாதையாக மாறிவிடுமோ என்கிற கேள்விக்கு வழிவகுத்திருக்கிறது.

​விரிவடைந்த பணிகள்

அரசமைப்புச் சட்டக்கூறு 280இன் கீழ், ஐந்தாண்​டு​களுக்கு ஒருமுறை குடியரசுத் தலைவரால் அமைக்​கப்​படும் நிதி ஆணையம், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வைத் தீர்மானிக்கும் மிக முக்கிய அமைப்பு.

1993இல் மேற்கொள்​ளப்பட்ட 73ஆவது, 74ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்​தங்​களுக்குப் பிறகு, இந்த ஆணையத்தின் பங்கு கணிசமாக விரிவடைந்தது. மாநில அரசுகளுக்கு மட்டுமன்றி, ஊரக உள்ளாட்​சிகள் (Rural Local Governments), நகர்ப்புற உள்ளாட்​சிகள் (Urban Local Governments) ஆகியவற்றுக்கும் எவ்வாறு நிதிப் பகிர்வு செய்ய​ வேண்டும் எனப் பரிந்துரைக்கும் பொறுப்பு இந்த அமைப்​புக்கு உண்டு.

அந்தந்த மாநில நிதி ஆணையங்​களின் (State finance commission) பரிந்துரைகளின் அடிப்​படையில் ஊரக உள்ளாட்​சிகளுக்​கும் நகர்ப்புற உள்ளாட்​சிகளுக்கும் அவற்றின் வளங்களை நிரப்ப ஒரு மாநிலத்தின் ஒருங்​கிணைந்த நிதியை அதிகரிப்​ப​தற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்​ளப்​படு​கின்றன.

நகரமய​மாதலுக்கு முக்கி​யத்துவம்

ஒவ்வொரு நிதி ஆணையமும் பரிந்துரைகளுக்கு முன்னால் தனது அணுகு​முறையை (Approach) விளக்​கும். 16ஆவது நிதி ஆணையம் முதன்​முறையாக நகரமய​மாதலைத் தனித்து​வ​மாகக் குறிப்​பிட்​டுள்ளது. ‘வேகமான நகரமயமாதல் பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டு​கோலாகச் செயல்​படும்’ என ஆணையம் கருதுகிறது.

ஆனால், இத்தகைய அணுகுமுறை இந்தியாவின் சமூக-அரசியல் சூழல்களை உள்ளடக்கிய ஒரு பரந்துபட்ட பார்வையைத் தந்துள்ளதா என்கிற கேள்வி எழுகிறது.

நகர வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி​யுடன் மட்டுமே தொடர்​புடையது அல்ல; அது சமூகச் சமத்துவம், மக்கள் பங்கேற்பு, சுற்றுச்​சூழல் நிலைத்​தன்மை, வாழ்வா​தாரப் பாதுகாப்பு ஆகிய பல பரிமாணங்​களைக் கொண்டது.

இவற்றைத் தவிர்த்து​விட்டு நகரமய​மாதலை மட்டும் முதன்​மையான இயக்கும் காரணி​யாகப் பார்ப்பது, உள்ளடக்கிய வளர்ச்சி (inclusive development) நோக்கத்​துக்கு முழுமை​யாகப் பொருந்​தாது.

தரவின் தரம்

10ஆவது நிதி ஆணையம் முதல் தற்போதுவரை, நகர்ப்புற உள்ளாட்​சிகளுக்கான நிதிப் பங்கு தொடர்ந்து அதிகரித்து​வரு​கிறது. ஆனால், இந்த உயர்வுக்கு அடிப்​படையாக இருக்கும் தரவுகளின் தரம் என்ன? அதே 16ஆவது நிதி ஆணைய அறிக்கை​யிலேயே, உள்ளாட்​சிகளுக்கான நிதித் தரவுகளின் தரம் தொடர்பான சிக்கல்கள் இறுதிவரை நீடித்​த​தாகக் குறிப்​பிடப்​பட்​டுள்ளது.

இந்நிலையில், தரவின் தரம் உறுதி செய்யப்​ப​டாமல் நகர்ப்புற உள்ளாட்​சிகளின் பங்கைத் தொடர்ந்து அதிகரிப்பது, திட்ட​மிடலிலும் நிதி ஒதுக்​கீட்​டிலும் பெரும் சிக்கல்களை உருவாக்​கலாம்.

14ஆவது, 15ஆவது நிதி ஆணையங்​களில் இல்லாத ‘Urbanisation Premium’ என்கிற புதிய கருத்​துரு​வாக்கம் 16ஆவது ஆணையத்தில் வலியுறுத்தப்படுகிறது.

நகரமயமாதலை மாநிலங்கள் வேகப்​படுத்​தினால் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்​படும் என்பதே இதன் சாரம். நிதிச் சமநிலையைப் பேண வேண்டிய ஓர் ஆணையம், நகரமய​மாதலை முன்னெடுக்கும் ஒரு கொள்கை அமைப்பைப் போலச் செயல்​படுவது போன்ற தோற்றத்தையே இது ஏற்படுத்து​கிறது.

அதிகாரப் பரவல் எங்கே?

நகரங்​களுக்கு அருகில் உள்ள கிராமங்களை (peri-urban villages) நகர்ப்புற உள்ளாட்​சிகளுடன் இணைக்கும் மாற்றுக் கொள்கையை (Rural-urban transition policy) இந்த ஆணையம் பரிந்துரைக்​கிறது. ஆனால், இதில் கிராம சபையின் அதிகாரம் குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை.

தமிழ்​நாட்டில் நகராட்​சிகளுடன் இணைக்​கப்​படுவதை எதிர்த்துப் பல கிராம ஊராட்​சிகள் கிராம சபைத் தீர்மானங்களை நிறைவேற்றி​ உள்ளன; போராட்​டங்​களும் நடத்தப்​படு​கின்றன. இது அவர்களின் அரசமைப்புச் சட்ட உரிமை​யாகும்.

ஆனால் 16ஆவது நிதி ஆணையம், கிராம சபையைப் பற்றிப் பேசாமல் ‘பொது ஆலோசனை’ (Public Consultation) பற்றிக் குறிப்​பிடுவது, கிராம ஊராட்​சிகளின் அதிகாரத்தைக் குறைக்கும் அபாயத்தை ஏற்படுத்து​கிறது.

73ஆவது, 74ஆவது அரசமைப்புச் சட்டத்​திருத்​தங்கள், உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி சார்ந்த திட்டங்களை உள்ளாட்​சிகள் வகுக்கும் என்று கூறின. ஆனால் 16ஆவது நிதி ஆணைய அறிக்கையில் இந்த இரண்டு முக்கிய அம்சங்​களும் இடம்பெற​வில்லை.

14ஆவது, 15ஆவது நிதி ஆணைய அறிக்கை​களில் உள்ளாட்​சிகள் குறித்து ‘Local Governments’ என்ற தலைப்பில் தனி அத்தி​யாயம் இருந்தது. ஆனால் 16ஆவது நிதி ஆணைய அறிக்கையில் அது ‘Local Bodies’ எனக் குறிப்​பிடப்​பட்​டுள்ளது.

இந்த மொழி மாற்றம் சிறிய​தாகத் தோன்றி​னாலும், உள்ளாட்​சிகளை ஒரு நிர்வாக அமைப்பாக மட்டுமே பார்க்கும் போக்கை இது பிரதிபலிக்​கிறது. உள்ளாட்​சிகள் என்பவை வெறும் அமைப்புகள் அல்ல; அவை அரசமைப்பால் அங்கீகரிக்​கப்பட்ட மூன்றாம் நிலை அரசாங்கம். 14ஆவது நிதி ஆணையம் இதைச் சுட்டிக்​காட்டுவது குறிப்​பிடத்​தக்கது.

பல மாநிலங்​களில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஐந்து ஆண்டு​களுக்கு ஒருமுறை உரிய நேரத்தில் நடத்தப்​ப​டாதது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால், 16ஆவது நிதி ஆணைய அறிக்கையில் அதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

வழங்கப்​படும் நிதியில் (tied and untied grants) ஊரக உள்ளாட்​சிகள் எந்தெந்த வேலைகளைச் செய்யலாம் என்பதைக் கிராம சபை தீர்மானிக்கும் என்று 16ஆவது நிதி ஆணையம் சொல்கிறது.

கிராம வளர்ச்சிக்குத் தேவையான வேலைகளில் மக்கள் பங்கேற்பை உறுதி​செய்​துள்ளது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்​சிகளில் மக்களின் பங்கேற்பைப் பற்றி எதுவும் சொல்ல​வில்லை.

நகர்ப்புற உள்ளாட்​சிகளில் மக்கள் பங்கேற்பை உறுதி​செய்யும் Area Sabha போன்ற அமைப்புகள் குறித்துக் குறிப்​பிடத்தக்க விவாதமும் இல்லை. தமிழ்​நாட்டில் உள்ள இது போன்ற அமைப்புகளை வலுப்​படுத்துவது நகர்ப்புற உள்ளாட்சி ஜனநாயகத்தை மேம்படுத்த உதவும்.

நகர–கிராம சமநிலையின் அவசியம்?

நகரமய​மாதலை ஊக்கு​விப்பது என்றால் அது நகரங்​களின் நிர்வாகத் திறனையும் சேவை வழங்கும் திறனையும் வலுப்​படுத்து​வதோடு தொடர்​புடையதா என்பது இன்னொரு கேள்வி.

இந்தியாவின் பல நகரங்​களில் குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, குடியிருப்பு வசதி, போக்கு​வரத்து போன்ற அடிப்படைச் சேவைகளில் ஏற்கெனவே பல்வேறு சிக்கல்கள் நிலவு​கின்றன.

இந்த நிலையில், உள்ளாட்சி நிர்வாக அமைப்பு​களின் திறனை அதிகரிக்​காமல் நகர்ப்புற எல்லைகளை விரிவுபடுத்துவது, புதிய பகுதிகளை நகராட்​சிகளுடன் இணைப்பது ஆகிய பணிகள் மேற்கொள்​ளப்​பட்டால் அது நகர்ப்புற நிர்வாகத்தை மேலும் சிக்கலாக்​கலாம்.

அதேபோல், நகரமய​மாதலை வளர்ச்சியின் ஒரே வழியாகப் பார்க்கும் அணுகு​முறை​யால், கிராமப்புற வளர்ச்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்​படும் அபாயமும் உள்ளது. இந்தியாவின் சமூக அமைப்பு பெரும்​பாலும் கிராமங்களை மையமாகக் கொண்டது​தான்.

கிராமப்பு​றங்​களில் உள்ள உள்ளாட்​சிகள் வலுப்​பெறாமல், அவற்றின் பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி உறுதி செய்யப்​ப​டாமல் நகரமய​மாதலை மட்டும் ஊக்கு​விப்பது சமநிலையற்ற வளர்ச்சியை உருவாக்​கும். நகரமய​மாதலை ஊக்கு​விப்பது அவசியம்​தான்.

ஆனால் அது கிராம உள்ளாட்​சிகளின் அதிகாரத்தையும் சமூக நீதி நோக்கத்தையும் மக்கள் பங்கேற்​பையும் பாதிக்கக் கூடாது. எதிர்கால நிதி ஆணையங்கள் நகர-கிராம சமநிலையை உறுதி​செய்யும் ஒருங்​கிணைந்த பார்வையை முன்னிறுத்த வேண்​டும். அதுவே கூட்​டாட்சித் தத்து​வத்தையும் உள்​ளாட்சி ஜன​நாயகத்​தையும் வலுப்​படுத்​தும்​.

- தொடர்புக்கு: m.gurusaravanan@gmail.com