惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
H
Help Net Security
G
Google Developers Blog
D
Docker
阮一峰的网络日志
阮一峰的网络日志
A
About on SuperTechFans
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 聂微东
Hugging Face - Blog
Hugging Face - Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Security Blog
Microsoft Security Blog
WordPress大学
WordPress大学
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
Stack Overflow Blog
Stack Overflow Blog
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக அரசின் டான்ஃபெட் நிறுவனத்துக்கும் ஆர்டிஐ சட்டம் பொர...
2026-04-26 · via hindutamil

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்

Updated on

2 min read

சென்னை: தமிழக அரசின் கட்​டுப்​பாட்​டின் கீழ் உள்ள டான்ஃபெட் நிறு​வனத்​துக்​கும் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டம் (ஆர்​டிஐ) பொருந்​தும் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழ்​நாடு கூட்​டுறவு வி்ற்​பனை இணை​ய​மான டான்ஃபெட், எந்​தெந்த நிறு​வனங்​களிடம் இருந்து உரங்​களை கொள்​முதல் செய்​கிறது, எந்த அடிப்​படை​யின்​கீழ் உரங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது, அவற்​றின் கொள்​முதல் விலை என்ன, விற்​பனை விலை என்ன என்​பது குறித்து தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின்​கீழ் பி.ஜோ​தி​பாசு என்​பவர் கேள்வி எழுப்​பி​யிருந்​தார்.

அதற்கு டான்ஃபெட் நிறு​வனத்​தின் பொது தகவல் அதி​காரி, ‘கூட்​டுறவு சங்​கங்​கள் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் வரம்​புக்​குள் வராது என ஏற்​கெனவே உச்ச நீதி​மன்​றம் தலப்​பாலம் கூட்​டுறவு சங்க வழக்​கில் உத்​தர​விட்​டுள்​ள​தால், இதுதொடர்​பான விவரங்​களை வழங்க முடி​யாது’ என மறுப்பு தெரி​வித்​தார்.

இதை எதிர்த்து மாநில தகவல் ஆணை​யத்​தில் ஜோதி​பாசு தொடர்ந்த மேல்​முறை​யீடும் தள்​ளு​படி செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், டான்ஃபெட் நிறு​வனத்​தின் நிலைப்​பாட்டை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பி.ஜோ​தி​பாசு வழக்கு தொடர்ந்​தார்.

‘டான்ஃபெட் நிறு​வன​மும் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் வரம்​புக்கு உட்​பட்​டது​தான். எனவே, தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின்​கீழ் கொள்​முதல் தொடர்​பாக கேட்​கப்​பட்ட கேள்வி​களுக்​கான பதில்​களை குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் வழங்க அந்​நிறுவன பொது தகவல் அலு​வலருக்கு உத்​தர​விட வேண்​டும்’ என மனு​வில் அவர் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்​சுமி நாராயணன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் எம்​.புருஷோத்​தமன் ஆஜராகி, ‘‘ஒரு கூட்​டுறவு அமைப்​புக்கு மாநில அரசு கணிச​மான நிதி​யுதவி அளித்​தால் அந்த கூட்​டுறவு சங்​கம் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் வரம்​புக்​குள் வரும் எனவும் உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது’’ என வாதிட்​டார்.

அதே​போல நீதி​மன்​றத்​துக்கு உதவ நியமிக்​கப்​பட்ட வழக்​கறிஞர் எம்​.எஸ்​.பழனி​சாமி​யும் இதே கருத்தை வலி​யுறுத்​தி​னார். ஆனால், டான்ஃபெட் நிறு​வனம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள் சி.​விக்​னேஷ்வரன், கீதா தாமரைச்​செல்​வன் ஆகியோர் டான்ஃபெட் நிறு​வனத்​துக்கு தகவல் அறி​யும் உரிமைச் சட்​டம் பொருந்​தாது என வாதிட்​டனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி வி.லட்​சுமி நாராயணன், ‘‘டான்ஃபெட் நிறு​வனம் தமிழக அரசின் கட்​டுப்​பாட்​டின்​கீழ், தமிழக அரசு வழங்​கும் நிதி​யுத​வி​யால் செயல்​படு​கிறது. அந்த நிறு​வனத்தை நிர்​வகிக்​கும் அதி​காரியை​யும், பொது தகவல் அதி​காரியை​யும் தமிழக அரசு​தான் நியமி்க்​கிறது.

டான்ஃபெட் நிறு​வனத்​துக்​கும் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டம் பொருந்​தும். எனவே, மனு​தா​ரர் கோரிய கேள்வி​களுக்கு பதிலளிக்க முடி​யாது என பொது தகவல் அதி​காரி மறுப்பு தெரிவிக்க முடி​யாது’’ என கூறி அதுதொடர்​பான உத்​தரவை ரத்து செய்து உத்​தர​விட்​டார்.

மேலும், டான்ஃபெட் நிறு​வனத்​தின் பொது தகவல் அதி​காரி, மனு​தா​ரர் சட்​டப்​படி கோரி​யுள்ள கேள்வி​களுக்​கான பதில்​களை உரிய விவரங்​களு​டன் 4 வார காலத்​துக்​குள்​ அளிக்​க வேண்​டும்​ எனவும்​ நீதிப​தி உத்​தரவி்ட்​டுள்​ளார்​.