惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
Google DeepMind News
Google DeepMind News
Stack Overflow Blog
Stack Overflow Blog
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
N
Netflix TechBlog - Medium
T
Tailwind CSS Blog
量子位
博客园 - 叶小钗
月光博客
月光博客
IT之家
IT之家
G
Google Developers Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
Engineering at Meta
Engineering at Meta
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
aimingoo的专栏
aimingoo的专栏
云风的 BLOG
云风的 BLOG
Vercel News
Vercel News
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நீட் வினாத்தாள் கசிவு: ரூ.1,500 கோடி சம்பாதித்த மகராஷ்டிர...
2026-05-20 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: நீட் 2026 வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகராஷ்டிராவின் பயிற்சி நிலைய உரிமையாளர், கடந்த ஆண்டு 2025 வினாத்தாளையும் கசிய வைத்து ரூ.1,500 கோடி சம்பாத்தித்ததாக கூறப்படுகிறது?

மகராஷ்டிரா மாநிலம், லாத்தூர் நகரில் 'ரேணுகா கேரியர் சென்டர்' எனும் பெயரில் நீட் பயிற்சி நிலையம் உள்ளது. இதன் உரிமையாளரான சிவராஜ் ரகுநாத் மோடேகாவ்ங்கர், இதுபோல் ஒரு தனியார் பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

பிறகு, தானே ஒரு நிறுவனத்தையும் துவக்கி உள்ளார். தற்போது, சிபிஐ விசாரணையில் சிக்கியுள்ள இந்த சிவராஜுக்கு, 2025 நீட் வினாத்தாளும் தேர்வுக்கு முன்பாகவே கிடைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையும் சேர்த்து அவர் தற்போது வரை ரூ.1,500 கோடி சம்பாதித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சிவராஜின் பயிற்சி மையத்தின் பல மாணவர்கள் நீட் 2025 தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றியைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 19 மாணவர்கள் பல்வேறு எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களில் தேர்வாகி உள்ளனர். இவர்களில், டெல்லி எய்ம்ஸில் 2, ஹைதராபாத் எய்ம்ஸில் 5, போபால் மற்றும் வாராணசி எய்ம்ஸ்களில் தலா மூவரும் தேர்வாகி பயில்கின்றனர்.

தனக்கு நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பாகவே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்துள்ளது. இதை பணமாக்க வேண்டி சிவராஜ், பொருளாதார ரீதியாக வசதி படைத்த குடும்பங்களின் மாணவர்களையே தன் பயிற்சி நிலையத்தில் சேர்த்துள்ளார்.

அதேசமயம், சராசரிக்கும் மேலான கல்வித் திறனைக்கொண்ட மாணவர்களைத் தேர்வு செய்துள்ளார். அந்த மாணவர்களின் குடும்பத்தினருடன் ரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

தேர்வு நடைபெறுவதற்கு கடைசி 15 நாட்களுக்கு முன்பாக, இந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வினாத்தாள் கைக்குக் கிடைத்த உடனேயே, அதில் உள்ள கேள்விகள் மற்றும் பதில்களை மாணவர்கள் மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தச் செயல்முறை தொடர்பான காட்சிப் பதிவும் சிபிஐ வசம் சிக்கியுள்ளது. அந்தக் காட்சிப் பதிவில், சிவராஜ் தனது பயிற்சி வகுப்பில் மாணவர்களிடம் தேர்வு குறித்துப் பேசிக்கொண்டிருப்பது தெரிகிறது. ஒரு மாணவர், ’மாதிரித் தேர்வில் இருந்த கேள்விகள் அனைத்தும் தேர்வில் இருந்தன’ என்று கூறுவதும் பதிவாகி உள்ளது.

இந்த காட்சிப் பதிவை சிவராஜ் புதிய மாணவர்களை சேர்க்கவும் பயன்படுத்தி உள்ளார். சிபிஐ-யில் வெளியாகும் தகவலின்படி, புனேவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் மனிஷா வாக்மாரே என்பவரின் வாயிலாக, பேராசிரியர் பி.வி. குல்கர்னி மற்றும் மனிஷா மாண்ட்ரே ஆகியோருடன் சிவராஜுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிமுகமாகி நட்பு கிடைத்துள்ளது.

சிபிஐ விசாரணையில் தற்போது விவேக் பாட்டீல் என்ற புதிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சிவராஜின் கும்பல்தான் அவருக்கும் கசிந்த வினாத்தாள்களை வழங்கியிருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது. முக்கிய பயிற்சி மாஃபியாவுக்கும் சில என்டிஏ அதிகாரிகளுக்கும் இடையே கூட்டுச் சதி இருந்திருக்கும் என்ற கோணத்தில் சிபிஐ விசாரித்து வருகிறது.