惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
Martin Fowler
Martin Fowler
J
Java Code Geeks
The GitHub Blog
The GitHub Blog
C
Check Point Blog
H
Help Net Security
Google DeepMind News
Google DeepMind News
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
P
Proofpoint News Feed
V
Visual Studio Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
雷峰网
雷峰网
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Vercel News
Vercel News
S
SegmentFault 最新的问题
L
LangChain Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The Cloudflare Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
有赞技术团队
有赞技术团队
博客园_首页
小众软件
小众软件
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மே. வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில் 9 இடங்...
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: பொது விநி​யோகத் திட்ட ஊழல் வழக்​கில் மேற்கு வங்​கத்​தில் 9 இடங்​களில் அமலாக்​கத் துறை நேற்று சோதனை நடத்​தி​யது.

மேற்கு வங்​கத்​தில் நலத்​திட்​டங்​களுக்​காக ஒதுக்​கப்​பட்ட பொது விநி​யோகத் திட்ட கோது​மை, பெரிய அளவில் திசை திருப்​பப்​பட்​ட​தாக, கோஜதங்கா சுங்​கத் துறை துணை ஆணை​யர் புகார் அளித்​திருந்​தார். அதன் அடிப்​படை​யில், பசீர்​ஹட் காவல் நிலை​யத்​தில் கடந்த 2020, அக்​டோபர் 23-ம் தேதி எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டது.

இதன் அடிப்​படை​யில் தொடங்​கப்​பட்ட விசா​ரணை​யைத் தொடர்ந்​து, அமலாக்​கத் துறை​யின் கொல்​கத்தா மண்டல அலு​வல​கம் இந்த சோதனையை நடத்​தி​யது. சட்​ட​விரோதப் பணப் பரி​மாற்ற தடை சட்​டத்​தின் கீழ் கொல்​கத்​தா, பர்த்​வான், ஹாப்ரா ஆகிய நகரங்​களில் உள்ள 9 இடங்​களில் நேற்று அதி​காலை முதல் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்​தினர்.

வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள நிரஞ்​சன் சந்​திர சாகா மற்​றும் பிறருடன் தொடர்​புடைய சப்​ளை​யர்​கள் மற்​றும் ஏற்​றும​தி​யாளர்​களுக்கு சொந்​த​மான இடங்​களில் இந்த சோதனை ஒரே நேரத்​தில் நடை​பெற்​றது.

இந்த முறை​கேடு தொடர்​பாக அமலாக்​கத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பொது விநி​யோகத் திட்ட கோது​மை​யைத் திசை திருப்ப குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் ஒரு முறை​யான வழி​முறையை கையாண்​டுள்​ளனர். சப்​ளை​யர்​கள், உரிமம் பெற்ற விநி​யோகஸ்​தர்​கள், டீலர்​கள் மற்​றும் இடைத்​தரகர்​களு​டன் கூட்டு சேர்ந்​து, அங்​கீகரிக்​கப்​ப​டாத வழிகள் மூலம் குறைந்த விலை​யில் கோதுமை கொள்​முதல் செய்​யப்​பட்​டது. பிறகு விநி​யோகச் சங்​கி​லி​யில் இருந்து பெரிய அளவி​லான கோதுமை திசை திருப்​பப்​பட்​டு, பல இடங்​களில் சேகரிக்​கப்​பட்​டது.

அங்கு இந்​திய உணவுக் கழகம் (எப்​சிஐ) மற்​றும் மாநில அரசு முத்​திரைகள் கொண்ட கோணிப் பைகள் அகற்​றப்​பட்​டு, புதிய கோணிப் பைகளில் கோதுமை நிரப்​பப்​பட்​டுள்​ளது. பிறகு அந்த கோதுமை சந்தை விற்​பனைக்​கும் ஏற்​றும​திக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் மூலம் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் முறையற்ற ஆதா​யம் அடைந்​துள்​ளனர். குற்​றச் செயல் மூலம் வரு​மானம் ஈட்​டி​யுள்​ளனர். இந்த சோதனை​யின் போது முக்​கிய ஆவணங்​கள் உட்பட பல ஆதா​ரங்​கள் திரட்​டப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

மேற்கு வங்​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முதல் கட்ட வாக்​குப் பதிவு கடந்த 23-ம் தேதி முடிந்​தது. இரண்​டாவது மற்​றும் கடைசி கட்ட தேர்​தல் ஏப்​.29-ம் தேதி நடை​பெறுகிறது. முதல்​வர் மம்தா பானர்​ஜி, ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் மீது பாஜக தலை​வர்​கள் பல ஊழல் குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்து தேர்​தல் பிரச்​சா​ரம் செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், 9 இடங்​களில் அமலாக்​கத்​ துறை சோதனை நடத்​தி​யது பெரும்​ பரபரப்​பை ஏற்​படுத்​தி உள்​ளது.