






















சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக நடிகை ரியா சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பிறகு, இந்தி நடிகை ரியா சக்ரவர்த்தி கடுமையான ஆன்லைன் ட்ரோல்களுக்கு உள்ளானார். அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் வெளியே வந்தார். தற்போது தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் அவர், சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சமூக ஊடகங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுக்கிறேன். சமீபகாலமாக இணையத்தின் சத்தம் சற்று சுமையாகத் தெரிகிறது. இதிலிருந்து விடுபட்டு, என்னை நிலை நிறுத்திக் கொள்ள சிறிது காலம் எடுத்துக் கொள்கிறேன். விரைவில் சந்திக்கும் வரை, உங்களது மன ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள், அன்பைப் பரப்புங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。