



















இந்நிலையில், தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிட்ட சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு கழக வேட்பாளர்கள் மற்றும் அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி கழக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இச்சந்திப்பில் தேர்தல் கள நிலவரம் தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 85.63 சதவீதம், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 91.94 சதவீதம், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.15 சதவீதம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 73.94 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தகக்து.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。