惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
云风的 BLOG
云风的 BLOG
IT之家
IT之家
C
Check Point Blog
T
The Blog of Author Tim Ferriss
S
SegmentFault 最新的问题
人人都是产品经理
人人都是产品经理
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
美团技术团队
M
MIT News - Artificial intelligence
Jina AI
Jina AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
F
Fortinet All Blogs
V
Visual Studio Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
Tailwind CSS Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
MyScale Blog
MyScale Blog
爱范儿
爱范儿
The Cloudflare Blog
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கடும் சவால் ஆட்டத்தில் நியூஸிலாந்து - ஈரான் ‘த்ரில்’ டிரா...
ஆர்.முத்துக்குமார் · 2026-06-16 · via hindutamil

Updated on: 

2026 ஃபிபா உலகக் கோப்பைத் தொடரின் தனது முதல் போட்டியில் பல்வேறு சவால்களைத் தாண்டி களமிறங்கிய ஈரான் அணி, சோஃபி மைதானத்தில் நியூஸிலாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இரு அணிகளும் நல்ல வேகத்துடனும் தாக்குதல் உத்திகளுடன் ஆடியதால் ஆட்டமே விறுவிறுப்பாக அமைந்தது.

ஃபிபா தரவரிசையின் படி நியூஸிலாந்து 84-வது இடம், ஈரானோ 20-வது இடம். ஆகவே ஈரான் தான் வெற்றி வாய்ப்புக்கான சாதகமுள்ள அணி என்றே பேசப்பட்டது. ஆனால், இருமுறை நியூஸிலாந்து முன்னிலை பெற்றது. ஈரான் மேலெழுந்து சமன் செய்ய நேரிட்டது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரியில் ஈரானுக்கு எதிராக போர் நடவடிக்கைகளைத் தொடங்கியதன் பின்னணியில், உலகக் கோப்பையில் பங்கேற்பதே கேள்விக்குறியாக இருந்த சூழலில் ஈரான் அணி இந்தப் போட்டிக்காக வந்தது. விசா சிக்கல்களால் தங்களின் பயிற்சி முகாமை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மேலும், அணியுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர்.

போட்டிக்கு முன்பாக 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முந்தைய ஈரானின் அடையாளமான “லயன் அண்ட் சன்” கொடிகள் ரசிகர்களிடையே காணப்பட்டன. அவற்றைத் தடுக்க உலகக் கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா முயன்ற போதிலும் அவை அரங்கில் தென்பட்டன. அதே நேரத்தில், லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஈரானிய வம்சாவளியினர் சிலர் தேசிய கீதத்தின்போது எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். எனினும் பெரும்பாலான ரசிகர்கள் ஈரான் அணிக்கு உற்சாகமான ஆதரவை அளித்தனர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் ஈரான் ஆதிக்கம் செலுத்தினாலும், ஏழாவது நிமிடத்தில் நியூஸிலாந்து முன்னிலை பெற்றது. கிறிஸ் உட் பந்தை சிறப்பாக கட்டுப்படுத்தி எலிஜா ஜஸ்ட் என்ற வீரருடன் இணைந்து தாக்குதல் அமைத்தார். அதனை எலிஜா ஜஸ்ட் வாலி ஷாட்டாக மாற்றி கோல் வலைக்குள் செலுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்க முயன்ற ஈரான் கேப்டன் மெஹதி தரேமி மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து நியூஸிலாந்து வீரர்களுக்குப் போக்குக் காட்டி கடைந்து எடுத்து நீண்ட தூரம் பந்தை எடுத்துச் சென்று அடித்த ஷாட் கோல்போஸ்ட்டின் வலது கம்பத்தில் பட்டு வெளியேறியது. இருப்பினும் 32-வது நிமிடத்தில் ஈரான் சமநிலையை எட்டியது. நியூஸிலாந்து வீரர் ஃபின் சுர்மான் தடுத்த பந்து, முன்னேறி வந்த ரமீன் ரெசாயன் வசம் சென்றது. பாக்சிற்குள் நியூஸிலாந்து தடுப்பு வீரர்கள் கொசகொசவென்று இருந்தாலும் அவர் அதை அட்டகாசமான ஆங்கிளில் கோலுக்குள் தள்ளி அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தார்.

இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் மீண்டும் தாக்குதலை உருவாக்கிய நியூஸிலாந்து, அழகான அணிசார் நகர்வின் முடிவில் எலிஜா ஜஸ்ட் மின்னல் வேகத்தில் பந்தை ஈரான் வீரர்களுக்குப் போக்குக் காட்டி எடுத்துச் சென்று பிறகு பந்தை மீண்டும் பின்பக்கமாக சுவிஸ் வீரருக்கு அனுப்ப, அவர் மீண்டும் எலிஜா ஜஸ்டிற்குக் கொடுக்க, அவர் அதைச் சிறப்பாக இரண்டாவது கோலாக மாற்ற நியூஸிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால், ஈரான் மீண்டும் போராடியது. ரெசாயியன் வலது பக்கத்திலிருந்து அனுப்பிய துல்லியமான கிராஸை முகமது மொகேபி தலையால் முடித்து கோலாக மாற்றினார். பந்து கம்பத்தில் பட்டது ஆனால் அதிர்ஷ்டவசமாக வலைக்குள் சென்றதால் ஈரான் மீண்டும் 2-2 என்ற சமநிலையை எட்டியது.

போட்டியின் இறுதிக்கட்டத்தில் இரு அணிகளுக்கும் வெற்றிக்கான கோலை அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றை பயன்படுத்த முடியவில்லை. இறுதியில் கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஈரானும் நியூஸிலாந்தும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.