惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
Martin Fowler
Martin Fowler
爱范儿
爱范儿
IT之家
IT之家
Last Week in AI
Last Week in AI
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
aimingoo的专栏
aimingoo的专栏
G
Google Developers Blog
J
Java Code Geeks
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
美团技术团队
The Cloudflare Blog
MyScale Blog
MyScale Blog
T
The Blog of Author Tim Ferriss
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
云风的 BLOG
云风的 BLOG
Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
腾讯CDC
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோவை சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் முதல்வர் விஜய்...
த.சக்திவேல் · 2026-05-24 · via hindutamil

Updated on: 

மேட்டூர்: கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் பேசி தமிழக முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊரான மேட்டூர் அருகே கொளத்தூர் உக்கம்பருத்தி காடு கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் மற்றும் பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ 7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். சிறுமியின் பெற்றோர் மற்றும் பாட்டியை வீட்டின் உள்ளறைக்கு அழைத்துச் சென்று பேசினர். அப்போது, தமிழக முதல்வர் விஜய் சிறுமியின் தந்தை மற்றும் பாட்டியிடம் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட எஸ்.பி கவுதம் கோயல் உடனிருந்தனர்.

சிறுமியின் தந்தை மற்றும் பாட்டி நிருபர்களிடம் கூறியதாவது: “இந்த சம்பவம் குறித்து கேட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். சிறுமியை கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸாரிடம் தெரிவித்துள்ளேன். உங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் விஜய் தெரிவித்ததாக கூறினர்.

<div class="paragraphs"><p>மத்திய அமைச்சர் எல்.முருகன் - மாநில அமைச்சர்கள் சந்திப்பு</p></div>

மத்திய அமைச்சர் எல்.முருகன் - மாநில அமைச்சர்கள் சந்திப்பு

பின்னர், போக்குவரத்துறை அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: இது மிகப்பெரிய இழப்பு. இது தொடர்பாக முதல்வர் வருத்தத்தையும், அறிக்கையும் வெளியிட்டுள்ளார். இது போன்ற எந்த ஒரு சம்பவமும் இனி தமிழ்நாட்டில் நடக்கக் கூடாது என இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு விரைந்து முடித்து கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியின் கீழ் ரூ 7 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. என்றார்.

மத்திய-மாநில அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்திப்பு: கோவையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்து விட்டு வந்தனர். அப்போது, அமைச்சர்கள் தமிழன் பார்த்திபன் மற்றும் சம்பத்குமார் வெளியே காத்திருந்தனர்.

பின்னர், பாஜக தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் வெளியே வரும் போது தமிழக அமைச்சர்களை நேருக்கு நேராக சந்தித்து பேசி கொண்டனர். அப்போது, தமிழக அமைச்சர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு, கட்சி நிர்வாகிகளையும் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினருக்கு வீடு இல்லை, அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்தார்.