惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
博客园 - 司徒正美
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
M
MIT News - Artificial intelligence
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Engineering at Meta
Engineering at Meta
Martin Fowler
Martin Fowler
H
Help Net Security
B
Blog
Y
Y Combinator Blog
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
I
InfoQ
爱范儿
爱范儿
Hugging Face - Blog
Hugging Face - Blog
D
Docker
博客园 - 【当耐特】
J
Java Code Geeks
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
முகமது சாலா, ஜிகோ, டிரெசெகுவட் அசத்தல்: வரலாற்றில் முதல் ...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

வான்கூவர்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று கனடா​வின் வான்​கூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதானத்​தில் ‘ஜி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் எகிப்து - நியூஸிலாந்து அணிகள் மோதின.

ஆட்​டத்​தின் 15-வது நிமிடத்​தில் நியூஸிலாந்து வீரர் டின் பெய்ன் கார்​னரில் இருந்து அடித்த பந்தை, எகிப்து அணி​யின் டிஃபெண்டர்​கள் யாரும் மார்க் செய்​யாமல் கோல் போஸ்ட்​டிற்கு மிக அரு​கில் நின்​று​கொண்​டிருந்த ஃபின் சர்​மான், லாவக​மாகத் தலை​யால் முட்டி கோல் வலைக்​குள் செலுத்​தி​னார்.

இதனால் நியூஸிலாந்து அணி 1-0 என முன்​னிலை பெற்​றது. 35-வது நிமிடத்​தில் எகிப்து வீரர் ஓமர் மர்​மூஷ் அடித்த ஃப்​ரீ-கிக்கை முகமது சாலா கோலாக மாற்ற முயன்​றார். ஆனால், துரதிர்ஷ்டவச​மாக அந்​தப் பந்து கோல் போஸ்ட்டை ஒட்​டிச் சென்று, வலை​யின் வெளிப்​புறப் பக்​க​வாட்​டில் பட்​டது. இதனால் கோல் அடிக்​கும் வாய்ப்பு எகிப்​துக்​குக் கைநழு​வியது. முதல் பாதியின் முடி​வில் நியூஸிலாந்து 1-0 என முன்​னிலை​யில் இருந்தது.

2-வது பாதி ஆட்​டம் தொடங்​கியதும் எகிப்து ஆக்​ரோஷ​மாக செயல்​பட்​டது. 58-வது நிமிடத்​தில் எகிப்து வீரர் அத்​தி​யா, பந்தை முகமது ஹானிக்கு பாஸ் செய்​தார். பந்​தைப் பெற்​றுக்​கொண்ட ஹானி, நிதான​மாக ஒரு டச் செய்து நிலைநிறுத்​தி, 6 அடி தூர பாக்ஸின் விளிம்பை நோக்கி ஒரு துல்​லிய​மான கிராஸை அனுப்பி​னார்.

அதே நேரத்​தில் பாக்​ஸிற்​குள் முஸ்​தபா ஜிகோ பாய்ந்து வந்து பந்​தைத் தனது தலை​யால் முட்டி நியூஸிலாந்து கோல்​கீப்​ப​ரால் தடுக்க முடி​யாத அளவுக்​குப் பலமாக கோல் வலைக்​குள் திணித்தார். இதனால் ஆட்​டம் 1-1 என சமநிலையை எட்​டியது. 67-வது நிமிடத்​தில் 18 அடி தூர பாக்​ஸின் வலது கார்னரில் பந்​தைப் பெற்​றுக்​கொண்ட நட்​சத்​திர வீரர் முகமது சாலா, நியூஸிலாந்து டிஃபெண்​டர் மைக்கேல் பாக்​ஸாலை சாதுரிய​மாகத் தடுத்து நிறுத்​தி, தனது சக வீரர்​கள் பாக்​ஸிற்​குள் ஓடி வரு​வதற்​காகக் காத்திருந்​தார்.

பின்​னர் சரி​யான தருணத்​தில், சக வீரர் ஜிகோவுடன் மின்​னல் வேகத்​தில் ‘ஒன்​-டூ’ பாஸ் செய்​து, தனக்​குக் கிடைத்த மிகக் குறுகிய இடைவெளியைப் பயன்​படுத்தி பந்தை கோல் வலைக்குள் தட்​டி​விட்​டார் முகமது சாலா. இதனால் எகிப்து 2-1 என முன்​னிலை பெற்​றது. 82-வது நிமிடத்​தில் முகமது சாலா கார்னரில் இருந்து அடித்த பந்தை பதிலி வீர​ராகக் களம் இறங்​கிய டிரெசெகு​வட் தலை​யால் முட்டி கோல் அடித்​தார்.

இதனால் எகிப்து 3-1 என்ற கோல் கணக்​கில் வலு​வான முன்னிலை பெற்​றது. நியூஸிலாந்து அணி​யால் கடைசி வரை போராடிய போதி​லும் மேற்​கொண்டு கோல் அடிக்க முடி​யாமல் போனது. முடி​வில் எகிப்து அணி 3-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. உல​கக் கோப்​பைத் தொடரில் கடந்த 1934 -ம் ஆண்டு அறி​முக​மான எகிப்து அணி, 92 வருடங்களுக்கு பிறகு முதல் முறை​யாக தற்​போது​தான் வெற்​றியை பதிவு செய்​துள்​ளது.

அந்த அணி இது​வரை 9 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்​றி, 3 டிரா, 5 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது. நடப்பு தொடரில் எகிப்து அணிக்கு இது முதல் வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் பெல்​ஜி​யம் அணிக்கு எதி​ராக 1-1 என்ற கணக்​கில் டிரா செய்​திருந்​தது. தற்​போதைய வெற்​றி​யின் மூலம் எகிப்து அணி 4 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் முதலிடத்​துக்கு முன்​னேறியது. எனினும் அந்த அணி​யின் நாக் அவுட் சுற்று வாய்ப்பு இன்​னும் உறுதி செய்​யப்​பட​வில்​லை.

எகிப்து அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் வரும் 27-ம் தேதி ஈரானுடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்தை டிரா செய்​தாலே எகிப்து அணி நாக் அவுட் சுற்​றுக்கு முன்​னேற வாய்ப்பு உள்​ளது. நியூஸிலாந்து அணிக்கு இது முதல் தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் ஈரான் அணி​யுடன் 2-2 என்ற கணக்​கில் டிரா செய்​திருந்​தது. நியூஸிலாந்து அணிக்​கும் அடுத்த சுற்​றுக்​கான வாய்ப்பு முடிந்​து​விட​வில்​லை.

அந்த அணி தனது கடைசி ஆட்​டத்​தில் பெல்​ஜி​யத்​துடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால்​ வரலாற்​றில்​ முதல்​ வெற்​றி​யுடன்​ நாக்​ அவுட்​ சுற்​றில்​ ​கால்​ப​திக்​கலாம்.