惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
aimingoo的专栏
aimingoo的专栏
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
Martin Fowler
Martin Fowler
B
Blog
The GitHub Blog
The GitHub Blog
T
Tailwind CSS Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
L
LangChain Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
D
DataBreaches.Net
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
IT之家
IT之家
GbyAI
GbyAI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
The Cloudflare Blog
C
Check Point Blog
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
8,000 ஊழியர்கள் பணிநீக்கம்: பேரதிர்ச்சி கொடுத்த மெட்டா ந...
2026-05-21 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மெட்டா ஊழியர்​களுக்கு நேற்​றைய தினம் ‘இன்று அனை​வரும் வீட்​டில் இருந்தே பணிபுரி​யுங்​கள்' என்ற ஒரு சாதாரண உத்​தர​வுடன் தொடங்​கியது. அமெரிக்​கா, பிரிட்​டன் உள்​ளிட்ட பல்​வேறு பிராந்​தி​யங்​களில் உள்ள ஊழியர்​கள் அலுவலகத்​திற்கு வர வேண்​டாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்​தது. இதனால் அவற்​றின் வளாகங்​களில் மக்​கள்​கூட்​டம் இல்​லை; அலு​வலக அறை​களில் அரட்​டைகள் இல்​லை; வளாகத்தின் தாழ்​வாரங்​களில் ஊழியர்​களின் பரபரப்​பான நடமாட்​ட​மும் இல்​லை.

அதன் தொடர்ச்​சி​யாக, ஊழியர்​களின் மின்​னஞ்​சல் பெட்டிகளுக்கு அடுத்​தடுத்து செய்​தி​கள் வரத் தொடங்​கின. மெட்டா பிளாட்​பார்ம்ஸ் நிறு​வனம், தனது ஒட்​டுமொத்​தப் பணியாளர்​களில் சுமார் 10 சதவீதம் ஊழியர்களை (8,000) பணிநீக்​கம் செய்​யும் நடவடிக்​கை​யைத் தொடங்​கி​யுள்​ளது. இதற்கான முதல் அறி​விப்​பு, சிங்​கப்​பூரில் உள்ள அதன் முக்​கிய மையத்​திலிருந்து வெளி​யானது.

சிங்​கப்​பூர் உள்​ளூர் நேரப்​படி அதி​காலை 4 மணிக்கு (இந்​திய நேரப்​படி நள்​ளிரவு 1:30 மணி) பணிநீக்​கம் செய்​யப்​பட்ட ஊழியர்களுக்கு மின்​னஞ்​சல்​கள் அனுப்​பப்​பட்​ட​தாக ‘புளூம்​பெர்க்' செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. உலகளா​விய நேர மண்டலங்களுக்கு ஏற்ப, அடுத்​தடுத்த கட்​டங்​களாக இந்த பணிநீக்க அறி​விப்​பு​கள் ஊழியர்​களுக்கு அனுப்​பப்​பட்டு வருகின்றன. முதலில் வீட்​டில் இருந்தே பணி செய்ய உத்​தர​விட்​டு, அதைத் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்​கையை மேற்​கொண்ட மெட்​டா​வின் இந்த உத்தி ஐடி உலகில் பெரும் விவாதத்​தைக் கிளப்பி​யுள்​ளது.

இதன் பின்​னணி​யில் செயற்கை நுண்​ணறிவு மறுசீரமைப்பு நடவடிக்​கைகள் இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. இந்த பணிநீக்க நடவடிக்​கைக்கு முன்பு மெட்டா நிறு​வனத்​தில் சுமார் 78,000 ஊழியர்​கள் பணி​யாற்றி வந்​தனர். இந்த நிலை​யில்​தான் தற்போது ஆயிரக்​கணக்​கானோர் பணிநீக்​கம் செய்​யப்​பட்டு வருகின்​றனர்; மேலும் பல ஆயிரம் ஊழியர்​கள் வேறு பிரிவுகளுக்கு மாற்​றப்​பட்டு வரு​கின்​றனர்.

6000 காலி இடம் முடக்கம்

இதுகுறித்து அந்​நிறு​வனத்​தின் முதன்மை மனிதவள அதி​காரி ஜானெல்லே கேல் ஊழியர்​களுக்கு அனுப்​பி​யுள்ள செய்திக்குறிப்பில் தெரி​வித்​துள்​ள​தாவது: 7,000 ஊழியர்​கள் செயற்கை நுண்​ணறிவு சார்ந்த புதிய குழுக்​களுக்கு மாற்றப்படுவார்​கள். காலி​யாக இருந்த சுமார் 6,000 பணியிடங்கள் முடக்​கப்​பட்​டுள்​ளன.

மேலாண்மை நிலைகளில் உள்ள அதி​காரி​களின் அடுக்​கு​கள் குறைக்​கப்​படு​கின்​றன. மேலும், குறைந்த எண்​ணிக்​கையி​லான ஊழியர்​களைக் கொண்ட சிறிய குழுக்​கள் மூலம், மிக விரைவாகவும் தன்​னா​திக்​கத்​துட​னும் செயல்​படக்​கூடிய எளிய நிறு​வனக் கட்​டமைப்பை நோக்கி நாம் நகர்ந்​துள்​ளோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.