惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
腾讯CDC
M
MIT News - Artificial intelligence
Y
Y Combinator Blog
L
LangChain Blog
Vercel News
Vercel News
云风的 BLOG
云风的 BLOG
GbyAI
GbyAI
Stack Overflow Blog
Stack Overflow Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog RSS Feed
The GitHub Blog
The GitHub Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog
P
Proofpoint News Feed
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园_首页
Google DeepMind News
Google DeepMind News
WordPress大学
WordPress大学
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
IT之家
IT之家
A
About on SuperTechFans
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
FIFA WC 2026: ஸ்பெயின் அணி அறிவிப்பு - இளம் வீரர் யமால் இ...
வேட்டையன் · 2026-05-25 · via hindutamil

Updated on: 

மாட்ரிட்: அடுத்த மாதம் தொடங்கும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து (2026) தொடருக்கான ஸ்பெயின் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர் லாமைன் யமால் இடம்பிடித்து அசத்தி உள்ளார்.

வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்த தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 104 போட்டிகள் விளையாடப்பட உள்ளது.

இதில் குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 11 முதல் 27-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை நடைபெறுகிறது. அதன் பின்னர் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 4 முதல் 11-ம் தேதி வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி ஜூலை 19-ம் தேதி அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் நடைபெறுகிறது.

இரண்டாவது உலக சாம்பியன் பட்டத்தை நோக்கி ஸ்பெயின்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின், கால்பந்து விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஸ்பெயின் நடைபெறும் ‘லா லிகா’ கால்பந்து தொடர் உலக அளவில் பிரபலமான தொடராக அமைந்துள்ளது. கடந்த 1934 முதல் உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் பங்கேற்று வருகிறது. நடப்பு தொடரையும் சேர்த்து 17-வது முறையாக உலகக் கோப்பையில் களம் காண்கிறது.

கடந்த 2010-ல் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதன் பிறகு 2014-ல் குரூப் சுற்று, 2018 மற்றும் 2022-ல் ‘ரவுண்ட் ஆப் 16’ வரை ஸ்பெயின் முன்னேறியது. இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது. நடப்பு யூரோ சாம்பியன் (2024), நேஷன்ஸ் லீக் தொடரில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அந்த நம்பிக்கையில் ஸ்பெயின், உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி குரூப் - ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் கேப் வர்டி, உருகுவே, சவூதி அரேபியா உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொடருக்காக 26 வீரர்கள் அடங்கிய அணியை அறிவித்துள்ளது ஸ்பெயின் கால்பந்து நிர்வாகம்.

இதில் இளம் வீரர் யமால் இடம்பெற்றுள்ளார். அதேபோல லா லிகா தொடரில் முக்கிய அணியான ரியல் மாட்ரிட் அணியில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் வீரர்கள் யாரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்த அணியில் இடம்பெறவில்லை. இது இப்போது பேசு பொருளாகி உள்ளது.

ஸ்பெயின் அணி விவரம்

>>கோல்கீப்பர்கள்: சிமோன், டேவிட் ராயா, ஜோன் கார்சியா

>>டிஃபெண்டர்கள்: குர்குரே, கிரிமால்டோ, குபார்ஸி, லபோர்தா, பியூபில், எரிக் கார்சியா, மார்கோஸ் லொரெண்டே, போரோ

>>மிட்ஃபீல்டர்கள்: பெத்ரி, ரூயிஸ், மார்ட்டின் ஜூபிமெண்டி, கேவி, ரோட்ரி, அலெக்ஸ் பேனா, மைக்கேல் மெரினோ, மைக்கேல் ஒர்சபால்

>>முன்கள வீரர்கள்: டேனி ஒல்மோ, நிகோ வில்லியம்ஸ், பினோ, ஃபெரான் டோரஸ், போர்ஜா இக்லேசியாஸ், விக்டர் முனோஸ், லாமைன் யமால்