惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
月光博客
月光博客
IT之家
IT之家
B
Blog RSS Feed
T
Tailwind CSS Blog
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 三生石上(FineUI控件)
MyScale Blog
MyScale Blog
J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - Franky
博客园 - 叶小钗
阮一峰的网络日志
阮一峰的网络日志
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
U
Unit 42
博客园_首页
B
Blog
V
V2EX
腾讯CDC
Vercel News
Vercel News
量子位
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னையில் ஆட்டோ எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு: 3 மணி நேரம்...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சென்​னை​யில் ஆட்டோ எல்​பிஜி எரி​வாயு கிடைப்​ப​தில் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால், ஓட்​டுநர்​கள் 3 மணி நேரம் வரை வரிசை​யில் காத்​திருந்​து, நிரப்பி செல்​லும் அவல நிலை ஏற்​பட்​டுள்​ளது.

மத்​திய கிழக்​கில் நில​வும் போர் பதற்​றத்​தால், காஸ் சிலிண்​டர், ஆட்டோ எல்​பிஜி எரி​வாயு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதை சமாளிக்க மாற்று வழிகளை மத்​திய அரசு எடுத்து வரு​கிறது. இதற்​கிடை​யில், வாக​னங்​ளுக்​கான எல்​பிஜி, சிஎன்ஜி எரி​வாயு கிடைக்​காத​தால், ஓட்​டுநர்​கள் கடும் சிரமத்தை சந்​திக்​கின்​றனர்.

சென்னை நகரில் பல்​லா​யிரக்​கணக்​கான ஆட்​டோக்​கள், கால் டாக்​சிகள் எல்​பிஜி மற்​றும் சிஎன்ஜி எரி​வா​யுவை பயன்​படுத்​துகின்​றன. தற்​போது எல்​பிஜி எரி​வாயு தட்​டுப்​பாட்​டால், பல்​வேறு தனி​யார் ஆட்டோ எரி​வாயு நிலை​யங்​களில் மூடப்​பட்​டுள்​ளன.

சைதாப்​பேட்​டை, கிண்​டி. சிஐடி நகர் உள்பட சில இடங்​களில் திறக்​கப்​பட்​டுள்ள எரி​வாயு நிரப்​பும் நிலை​யங்​களில் நீண்ட வரிசை​யில் பல மணி நேரம் காத்​திருந்து நிரப்பி செல்​லும் அவல நிலை ஏற்​பட்​டுள்​ளது.

உதா​ரண​மாக, சிஐடி நகரில் 2 கி.மீ. தூரத்​துக்கு 3 மணி நேர​மாக நீண்ட வரிசை​யில் காத்​திருந்​து, காஸை நிரப்பி செல்​லும் பரி​தாப நிலைக்கு ஆட்டோ ஓட்​டுநர்​கள் தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

சென்​னை​யில் ஆட்​டோ, கார் ஆகிய​வற்​றுக்கு நிரப்​பப்​படும் காஸ் நிரப்​பும் நிலை​யங்​கள் மூடப்​பட்​டுள்​ள​தால், ஆட்டோ ஓட்​டுநர்​கள் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. இது குறித்​து, ஆட்டோ ஓட்​டுநர்​கள் கூறுகை​யில், “ஏற்​க​னவே ஆட்டோ எரி​வாயு தட்​டுப்​பாட்​டால், ஓட்​டுநர்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது, பெரும்​பாலான நிலை​யங்​களில் எல்​பிஜி எரி​வாயு கிடைக்​காத​தால், ஓட்​டுநர்​களுக்கு மன உளைச்​சல் ஏற்​பட்​டு, உடல்​நலக் குறைவு ஏற்​படு​கிறது. இப்​பிரச்​சினைக்கு மத்​திய அரசு தீர்வு காண வேண்​டும்” என்​றனர்.

இது குறித்​து, இந்​திய எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்​திய எண்​ணெய் நிறு​வனங்​களில் போது​மான அளவு எரி​வாயு கையிருப்பு உள்​ளது. எண்​ணெய் நிறு​வனங்​களின் கீழ் செயல்​படும் எரி​வாயு நிரப்​பும் மையங்​களுக்​கும் போது​மான அளவு காஸ் வழங்​கப்​படு​கிறது.

வாகன ஓட்​டிகள் தங்​களுக்​குரிய வாக​னங்​களில் போது​மான அளவு காஸ் நிரப்பி கொள்​ளலாம். ஆட்​டோக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​துக்​கிடப்​ப​தற்கு காரணம் பல தனி​யார் காஸ் நிரப்​பும் நிலை​யங்​களில், எரி​வாயு இல்​லாமல் இருப்​பதுதான்.

அத்​துடன், காஸ் தட்​டுப்​பாடு காரண​மாக, ஒருசில காஸ் நிரப்​பும் மையங்​கள் தற்​காலிக​மாக மூடப்​பட்​டுள்​ளன. இதனால், ஒட்​டுமொத்​த​மாக அனை​வரும் இந்​திய எண்​ணெய் நிறு​வனங்​கள் நடத்​தும் மையங்​களை தேடி ஒரே நேரத்​தில் செல்​வ​தால், நீண்ட வரிசை​யில் நிற்க வேண்​டிய நிலை ஏற்​படு​கிறது. இவ்​வாறு அவர்கள் தெரிவித்தனர்.