





























இது தொடர்பாக ‘தி பாரடைஸ்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த சில நாட்களாக, ‘தி பாரடைஸ்’ படம் குறித்து பல ஆதாரமற்ற வதந்திகளும், யூகங்களும் பரப்பப்படுவதை கவனிக்கிறோம். இதனை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். ’தி பாரடைஸ்’ படம் முதல் நாளிலிருந்தே முழுமையான தெளிவுடன் திட்டமிடப்பட்டது. தற்போது அதன் பணிகள் திட்டமிட்டபடியே மிகச் சரியாக நடைபெற்று வருகின்றன. 100 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்புப் பணிகள் ஏற்கெனவே வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டன.
மீதமுள்ள படப்பிடிப்பும் எவ்வித தாமதமுமின்றி, திட்டமிட்டபடியே நடைபெற்று வருகிறது. இன்றுவரை, இப்படத்தில் ஒரு காட்சி கூட மறுபடப்பிடிப்பு செய்யப்படவில்லை. எதிர்காலத்திலும் ’தி பாரடைஸ்’ படத்திற்காக எந்தவொரு மறுபடப்பிடிப்பும் திட்டமிடப்படவில்லை. இப்படத்தின் ஒவ்வொரு கட்டப் பணியும், முதலில் உருவாக்கப்பட்டபோது எத்தகைய பிரம்மாண்டத்துடனும், துல்லியத்துடனும், உறுதியுடனும் கற்பனை செய்யப்பட்டதோ, அதே தரத்துடனும், தீவிரத்துடனும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。