惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
小众软件
小众软件
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
美团技术团队
S
SegmentFault 最新的问题
宝玉的分享
宝玉的分享
博客园 - 叶小钗
月光博客
月光博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
Tailwind CSS Blog
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
J
Java Code Geeks
Y
Y Combinator Blog
D
Docker
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்க​ தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பிடித்த ம...
2026-04-28 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் மீன் நுகர்வு மிக அதி​க​மாக உள்ள மாநிலங்​களில் மேற்கு வங்​க​மும் ஒன்​று. இங்கு அதிக நதி​கள் கொண்ட பூகோள அமைப்பு காரண​மாக பெரும்​பாலான மக்​கள் மீன் உணவை அதி​கம் உண்​கின்​றனர். அசைவ உணவுப் பட்​டியலில் மீன் இருந்​தா​லும் பிராமணர் உள்​ளிட்ட சைவ உணவாளர்​களும் அதை சாப்​பிடு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பாஜக ஆட்​சிக்கு வந்​தால் மீன் உள்​ளிட்ட பெங்​காலி வகை உணவு முறையை தடை செய்து விடு​வார்​கள் என முதல்​வர் மம்தா பானர்ஜி முதல்​கட்ட தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் புகார் எழுப்​பி​னார். இதை மறுக்க வேண்​டிய கட்​டா​யம் பாஜக​வுக்கு ஏற்​பட்​டது. இதனால் நேற்​றுடன் முடிந்த இரண்​டாவது மற்​றும் இறு​திக்​கட்ட தேர்​தல் பிரச்​சா​ரத்​தி​லும் மீன் அரசி​யல் முக்​கிய இடம் பிடித்​தது.

சில நாட்​களுக்கு முன், பாஜக எம்​.பி. அனு​ராக் தாக்​கூர் மீன் சாப்​பிடும் காட்​சிப்​ப​திவு வெளி​யாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. பாஜக தலை​வர்​களில் பலர் தங்​கள் கைகளில் மீன்​களை ஏந்​தி​யபடியே பிரச்​சா​ரம் செய்​தனர். போஜ்புரி மொழி திரைப்பட நாயகரும் உ.பி.​யின் கோரக்​பூர் எம்​.பி.​யு​மான ரவி கிஷன் தனது பிரச்​சா​ரக் காட்​சிப்​ப​தி​வில், “தேர்​தல் முடிவு வெளி​யாகும் மே 4-ம் தேதிக்​குப் பிறகு, நீங்​கள் வழக்​கத்தை விட நான்கு மடங்கு மீன் சாப்​பிடுங்​கள்.

அனைத்து வகை மீன்​களை​யும் நாங்​கள் இங்கு கொண்டு வந்து சேர்ப்​போம். என்​டிஏ ஆட்சி செய்​யும் மாநிலங்​களில் இருந்து மீன்​களைக் கொண்​டு​வந்து மேற்கு வங்​கக் கிணறுகள் மற்​றும் குளங்​களில் விடு​வோம். எனவே அதிக மீன் சாப்​பிடு​வ​தில் எந்​தப் பிரச்​சினை​யும் இருக்​காது" என்​றார். இந்த சூழலில் கடந்த காலத்​துடன் ஒப்​பிடு​கை​யில் மேற்கு வங்க மக்​களின் மீன் நுகர்வு குறைந்​துள்​ள​தாக புள்​ளி​விவரம் வெளி​யாகி​யுள்​ளது.

மத்​திய அரசின் தேசிய குடும்ப சுகா​தார ஆய்​வின் தரவு​களின்​படி, நாடு முழு​வதும் 45.7% ஆண்​களும், 35.7% பெண்​களும் மீன் உண்​கின்​றனர். தேசிய அளவில் ஆண்​களே அதிக அளவில் மீன் உண்​பவர்​களாக இருந்​தா​லும், மேற்கு வங்க நிலைமை இதற்கு மாறாக உள்​ளது. இங்கு 87.8% பெண்​களும், 87.4% ஆண்​களும் மீன் உண்​கின்​றனர். இது தொடர்​பான கணக்​கெடுப்பு 2019, 2021-க்கு இடைப்​பட்ட காலத்​தில் நடத்​தப்​பட்​டது.

ஆனால் 2015-16-ம் ஆண்டு கணக்​கெடுப்பு அடிப்​படை​யில் மேற்கு வங்​கத்​தில் 91.4% பெண்​களும், 91.3% ஆண்​களும் மீன் உட்​கொண்டு வந்​தனர். எனவே 2015-16-ம் ஆண்​டுடன் ஒப்​பிடு​கை​யில், 2019 -21-ல் மீன் உண்​ணும் ஆண்​கள் மற்​றும் பெண்​களின் எண்​ணிக்கை சுமார் 4% குறைந்​துள்​ளது.

இறைச்​சி, மீன், முட்​டைகளுக்​காக செல​விடும் குடும்​பங்​களின் பட்​டியலில், மேற்கு வங்​கம்​ 2-வது இடத்​தில்​ உள்​ளது. கேரளா முதலிடத்​தில்​ உள்​ளது.