惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
Recent Announcements
Recent Announcements
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
M
MIT News - Artificial intelligence
博客园_首页
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
J
Java Code Geeks
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
Vercel News
Vercel News
The Cloudflare Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
云风的 BLOG
云风的 BLOG
N
Netflix TechBlog - Medium
B
Blog
Google DeepMind News
Google DeepMind News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உ.பி.யில் பிடிஏ துணைத் தலைவர் மணிகண்டன் ஐஏஎஸ் மாற்றம்
ஆர்.ஷபிமுன்னா · 2026-06-16 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: தமிழ்​நாட்​டின் நெய்​வேலியைச் சேர்ந்த தமிழ​ரான டாக்​டர்​.ஏ.மணி​கண்​டன், 2017ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற உ.பி. மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதி​காரி. நாட்​டிலேயே மருந்​தி​யல் துறையில் முனை​வர் பட்​டம் பெற்ற முதல் ஐஏஎஸ் அதி​காரி​யான இவர், உ.பி.​யின் பரேலி வளர்ச்சி ஆணை​யத்​தின் (பிடிஏ) துணைத் தலை​வ​ராகப் பணி​யாற்றி வந்​தார்.

பரேலி​யில் மணி​கண்​டன் பதவி ஏற்​றது முதல், பல வளர்ச்​சித் திட்டங்​களும் அந்​நகரில் அமலாகின. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​தின் ‘நாத் காரி​டார்' என்ற கனவு திட்​டத்​தின் ஆரம்​பக்​கட்​டப் பணி​கள் பாராட்​டைப் பெற்​றன. இதே​போல், பொது​மக்களுக்கான ராம்​கங்கா நகர் வீட்டு வசதித் திட்​டம், கிரேட்​டர் பரேலி வீட்டு வசதித் திட்​டம், முதல்​வர் மாதிரி ஒருங்​கிணைந்த பள்ளி மற்​றும் விளை​யாட்டு வளாகம் போன்​றவற்றை அமல்படுத்தி​னார்.

குறிப்​பாக, பரேலி​யில் ருத்​ர​வனம் எனும் பூங்​காவை சர்​வ​தேச அளவில் முன்​னிருந்து அமைத்​திருந்​தார். இதனுள், ராமாயண் வாட்​டிகா எனும் புதிய அம்​சத்​தை​யும் உரு​வாக்​கி, முதல்​வர் யோகி​யின் பாராட்​டைப் பெற்​றார். இந்​நிலை​யில், கடந்த செப்டம்பர் மாதம், நகரில் கலவரத்​தில் ஈடு​பட்​ட​தாகக் குற்றம்சாட்​டப் ​பட்​ட​வர்​களின் சட்​ட​விரோதக் கட்​டு​மானங்​களை இடித்​துத் தள்​ளியதன் மூலம் அவர் மாநிலம் முழு​வதும் கவனத்தை ஈர்த்​தார்.

சட்​ட​விரோதக் கட்​டு​மானங்​களுக்கு எதி​ரான கடுமை​யான நடவடிக்​கைகள் மற்​றும் வளர்ச்​சித் திட்​டங்​களில் அலட்​சி​யம் காட்டு​வோருக்கு எதி​ரான செயல்​பாடு​கள் அதி​காரி மணி​கண்டனிடம் அதி​கம் இருந்​தன. இதனால் பல நிர்​வாக அதிகாரிகள் மற்​றும் மக்​கள் பிர​தி​நி​தி​களின் விமர்சனங்களுக்கும் இலக்​கா​னார். இதையடுத்​து, பரேலி நகரை விரிவு படுத்​தும் நோக்​கில், பிலிபித் பைபாஸ் சாலை​யில் உள்ள மகாதேவ்​புரம் வீட்​டு​வச​தித் திட்​டம் மற்​றும் டெல்லி சாலை​யில் உள்ள தொழிற்​பேட்டை ஆகிய​வற்​றுக்​கான நிலம் கையகப்​படுத்​தும் பணி​களை அவர் துரிதப்படுத்தினார்.

பரேலிக்கு முதல்​வர் யோகி​யின் வரு​கையை முன்​னிட்​டு, ‘ராமாயண வாடி​கா'​வைத் திறந்து வைப்​ப​தற்​கும், மகாதேவ்​புரம் வீட்டு ​வச​தித் திட்​டத்​துக்கு அடிக்​கல் நாட்​டு​வதற்​கும் அவர் தீவிர முயற்​சிகளை மேற்​கொண்​டிருந்​தார். இருப்​பினும், உ.பி. அரசு அவரை திடீரென பிடிஏ​வின் துணைத் தலை​வர் பதவியி​லிருந்து நேற்று விடு​வித்​துள்​ளது. அந்​தப் பதவி​யில் அவரது பேட்ச்​மேட்டான ஐஏஎஸ் சவுமியா பாண்டே நியமிக்​கப்​பட்​டுள்​ளார். பரேலி​யில் பல வளர்ச்​சித் திட்​டங்​களை செய்​தவர் மணி​கண்​டன்​ என்​ப​தால்​ அவரது மாற்​றம்​ சர்ச்​சைக்​கு உள்​ளாகி விட்​டது.