
























Updated on
:
1 min read
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி உடன்பாடு ஏற்படாதது, ஹார்முஸ் ஜலசந்தி மூடல் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் விநியோகத்தில் தடை நீடித்து வருவதால், இன்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரல் 120 டாலரைத் தாண்டி அதிர்ச்சி அளித்தது.
சர்வதேச அளவில் நிலவும் போர் அபாயம் காரணமாக முதலீட்டாளர்கள் டாலரை பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். அதன் எதிரொலியாக, நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.20 என்ற அளவில் புதிய வரலாற்று சரிவை எட்டியது.
இதனிடையே, எண்ணெய் விலை உயர்வு மற்றும் போர்ச் சூழல் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இதன் தாக்கத்தால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 0.75% சரிவை சந்தித்து.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் இருந்தே கடும் வீழ்ச்சி நிலவியது. மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. எனினும், இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 582.86 சரிந்து 76,913.50 எனவும், நிஃப்டி 180.10 புள்ளிகள் சரிந்து 23,997.55 எனவும் நிலை கொண்டிருந்தது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。