




















Updated on
:
1 min read
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படத்துக்கு ‘சத்தியவான் சாவித்திரி’ என தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வந்தது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்துக்கு ‘சத்தியவான் சாவித்திரி’ எனத் தலைப்பிடப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணிபுரிந்துள்ள இப்படத்தில் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நீதிமன்றத்தை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். இறுதிகட்டப் பணிகளை முடித்து, விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. தமிழில் நீண்ட நாட்கள் கழித்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。