




















Updated on
:
1 min read
புதுடெல்லி: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மோசமான சாதனையை டெல்லி கேபிடல்ஸ் அணி இன்று பதிவு செய்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், பவர்பிளே ஓவர்களில் டெல்லி அணி பேட்டிங்கில் முற்றிலும் நிலைகுலைந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஐபிஎல் வரலாற்றில் மிக உயர்ந்த ஸ்கோர்களில் ஒன்றைப் பதிவு செய்த டெல்லி அணிக்கு, இன்று ஒரே இரவில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் அனல் பறக்கும் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முதல் 6 ஓவர்களில் டெல்லி அணி வெறும் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இதன் மூலம், 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எடுத்த 14/3 ரன்களே மிகக்குறைந்த பவர்பிளே ஸ்கோராக இருந்தது. அந்த மோசமான சாதனையை இன்று டெல்லி அணி முறியடித்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பவர்பிளே ஸ்கோர்கள்:
2026 - DC vs RCB: 13/6
2022 – SRH vs RR: 14/3
2009 – RR vs RCB: 14/2
2011 – CSK vs KKR: 15/2
2015 – CSK vs DC: 16/1
2019 – CSK vs RCB: 16/1
டெல்லி அணியின் இன்னிங்ஸைத் தொடங்கிய அறிமுக வீரர் சஹில் பராக், புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஜோஷ் ஹேசில்வுட் தனது அபாரமான பந்துவீச்சால் கேஎல் ராகுல் மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார். மேலும் நிதின் ரானாவையும் ஹேசில்வுட் வீழ்த்த, புவனேஷ்வர் குமார் தனது பங்கிற்கு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பவர்பிளே முடிவில் புவனேஷ்வர் குமார் (3-0-5-3) மற்றும் ஹேசில்வுட் (3-0-8-3) ஆகியோரின் புள்ளிவிவரங்கள் டெல்லி அணியின் சரிவை அப்பட்டமாக விளக்கின. 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக டெல்லி அணியை வீழ்த்தி ஆர்சிபி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。