惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
小众软件
小众软件
Y
Y Combinator Blog
S
SegmentFault 最新的问题
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
L
LangChain Blog
Martin Fowler
Martin Fowler
美团技术团队
B
Blog RSS Feed
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 司徒正美
T
Tailwind CSS Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
腾讯CDC
Hugging Face - Blog
Hugging Face - Blog
D
Docker
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சட்டப்பேரவை கட்சித் தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்வு
2026-05-06 · via hindutamil

புதுச்சேரியில் புதிதாக தேர்வான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

Updated on

1 min read

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் நடந்த என்​.ஆர்​.​காங்​கிரஸ் கட்​சி​யின் எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்​தில், அக்கட்​சி​யின் சட்​டப்​பேர​வைத்​ தலை​வ​ராக ரங்​க​சாமி மீண்​டும் தேர்வு செய்யப்பட்டார். அமைச்​சர்​கள் யார் யார் என்​பதை ரங்​க​சாமி விரை​வில் முடிவு செய்ய உள்​ளார்.

புதுச்​சேரி​யில் புதுச்​சேரி, காரைக்​கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்​தி​யங்​கள் உள்​ளன. இதற்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப். 9-ம் தேதி நடை​பெற்​றது. இங்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​கும் இண்​டியா கூட்​ட​ணிக்​கும் இடையே கடும் போட்டி நில​வியது.

என்​டிஏ கூட்​ட​ணி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ், பாஜக, அதி​முக, புதி​தாக உரு​வான லட்​சிய ஜனநாயக கட்சி உள்​ளிட்​டவை இடம்​பெற்​றிருந்​தன. இண்​டியா கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் - திமுக இடையே ஏற்​பட்ட மோதலால் தொடக்​கம் முதலே பெரும் குழப்​பம் ஏற்​பட்​டு, தேர்​தலை சந்​தித்​தது. திமுக போட்​டி​யிட்ட 5 தொகு​தி​களில் காங்​கிரஸ் வேட்​பாளர்களும் நிறுத்​தப்​பட்​டனர். அத்துடன் இடது​சா​ரி​கள் தனித்​துப் போட்​டி​யிட்​டனர். விசிக​வுக்கு ஒதுக்​கிய தொகு​தி​யில் காங்​கிரஸ், இடது​சா​ரி​கள் போட்​டி​யிட்​டன.

தமிழகத்​தைப் போலவே புதுச்​சேரி​யிலும் கடந்த 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற்​றது. இதில், என்​டிஏ கூட்​டணி 18 இடங்​களை கைப்​பற்றி மீண்​டும் ஆட்​சி​யமைக்​கிறது. இக்​கூட்​ட​ணிக்கு தலை​மையேற்​றிருக்​கும் என்​.ஆர்​.​காங்​கிரஸ் 12 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. பாஜக 4 தொகு​தி​களை வென்​றுள்​ளது.

அதி​முக, லட்​சிய ஜனநாயகக் கட்சி முறையே ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றுள்​ளன. தேர்​தல் முடிவு வந்​ததைத் தொடர்ந்​து, என்​.ஆர்​.​காங்​கிரஸில் வெற்றி பெற்ற அனை​வரும், முதல்​வரும் என்​.ஆர்​.​காங்​கிரஸ் கட்​சி​யின் நிறு​வனரு​மான ரங்​க​சாமியை சந்​தித்து ஆசி பெற்​றனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்​தினம் நள்​ளிர​வில் காம​ராஜர் சாலை​யில் உள்ள ஓட்​டலில் கட்​சி​யின் எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் ரங்​க​சாமி தலை​மை​யில் நடந்​தது. இதில் பங்​கேற்ற எம்​எல்​ஏக்​கள் முதல்​வர் ரங்​க​சாமியை பேரவை கட்​சித் தலை​வ​ராக ஒரு​மன​தாக தேர்வு செய்​தனர். இதற்​கான கடிதத்​தில் எம்​எல்​ஏக்​கள் கையெழுத்​திட்​டனர்.

என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொடர்​வ​தாக முதல்​வர் ரங்​க​சாமி ஏற்​கெனவே அறி​வித்​துள்​ளார். மேலும் புதுச்​சேரி​யில் அமைச்​சர்​கள் பதவி யாருக்​கு, கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கு எத்​தனை அமைச்​சர்​கள்​ என்​பதை முதல்​வர்​ ரங்​க​சாமி முடிவு செய்​ய இருக்​கிறார்​.