惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
罗磊的独立博客
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
J
Java Code Geeks
U
Unit 42
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog RSS Feed
爱范儿
爱范儿
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
T
The Blog of Author Tim Ferriss
腾讯CDC
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
I
InfoQ
月光博客
月光博客
博客园_首页
Vercel News
Vercel News
P
Proofpoint News Feed
GbyAI
GbyAI
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விஜய் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும்: அரசியல் கட்சித...
2026-05-08 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: ‘சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்ள தவெக, ஆட்சி அமைப்​ப​தில் நீடிக்​கும் இழுபறிக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும்’ என, பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்து அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: கடந்த காலங்​களை போலவே தமிழகத்​தில் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசுக்கு எதி​ராக, ஆளுநர்​களை வைத்து அரசி​யல் நடத்​தும் மத்​திய அரசு தற்​போதும் இடையூறு செய்து வரு​கிறது.

அதிக தொகு​தி​களில் வெற்றி பெற்ற தவெக​வுக்கு ஆட்சி அமைப்​ப​தற்கு அழைப்பு விடுக்​காமல் ஆளுநர் காலம் தாழ்த்​து​வது அரசி​யலமைப்​பிற்கு எதி​ராக உள்​ளது.

மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம்: ஆளுநர் மூலம் அரசி​யல் சாசனத்​துக்கு விரோத​மாக நடந்து கொள்​வது, தனது அரசி​யல் நோக்​கத்தை நிறைவேற்​றிக் கொள்​வது என்ற அணுகு​முறையை பாஜக கடைபிடித்து வரு​கிறது.

இதன் தொடர்ச்​சி​யாகவே தவெக தலை​வர் விஜய்யை பதவி​யேற்க அழைக்​காமல் ஆளுநர் காலம் கடத்தி வரு​கிறார். இது ஏற்​புடையதல்ல.

எனவே, வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலை​யில் தனிப்​பெரும் கட்​சி​யாக வெற்றி பெற்​றுள்ள விஜய்யை உடனடி​யாக பதவி​யேற்க அழைப்பு விடுக்க வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன்: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், எந்​தவொரு கட்​சி​யும் தனித்து ஆட்சி அமைக்க வழி​வகுக்​கும் தெளி​வான தீர்ப்பை வாக்​காளர்​கள் வழங்​க​வில்​லை. இருப்​பினும் தவெக​வுக்கு 108 இடங்​களை வழங்​கி​யுள்​ளனர்.

இதன் அடிப்​படை​யில் ஆளுநரை சந்​தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி​யுள்​ளார். பதவி​யேற்பு விழாவுக்கு முன்பு பெரும்​பான்​மையை நிரூபிக்க வேண்​டும் என ஆளுநர் வலி​யுறுத்​து​வது பொருத்​தமற்​றது.

தனிப்​பெரும் கட்​சி​யாக தவெக இருப்​ப​தால், அரசி​யலமைப்​பின்​படி, சட்​டப்​பேர​வை​யில் தனது பெரும்​பான்​மையை நிரூபிக்க ஆளுந​ரால் அதற்கு ஒரு வாய்ப்பு வழங்​கப்பட வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: பாஜக, அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழக அரசி​யலில் தலை​யீடு செய்து குழப்​பத்தை உரு​வாக்​கிக் கொண்​டிருக்​கிறார்​கள். தனிப் பெரும் கட்​சி​யாக மக்​களால் தவெக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

எனவே, விஜய்யை பதவி​யேற்க அனு​ம​திக்க வேண்​டும். அது​தான் அரசி​யல் அமைப்​புச் சட்​டம் காட்​டும் வழி​காட்​டு​தல். ஆனால், ஆதரவு கோரிய நிலை​யில் இது​வரை ஆளுநர் எந்த முடி​வும் எடுக்​காமல் குழப்​பத்தை ஏற்​படுத்த இடம் கொடுக்​கிறார். இது ஏற்​புடையது அல்ல.

மநீம தலை​வர் கமல்​ஹாசன்: விஜய்யை ஆட்​சி​யமைக்க அழைக்​காமல் இருப்​பது தமிழக மக்​களின் ஆணையை அவம​திப்​ப​தாகும். 233 தேர்ந்​தெடுக்​கப்​பட்ட உறுப்​பினர்​கள் இன்​னும் பதவி​யேற்க முடி​யாமல் இருக்​கிறார்​கள்.

இது மாநிலத்​துக்கு நேரும் அவமானம்; மக்​களாட்​சிக்கு ஏற்​படும் சேதம். ‘பெரும்​பான்​மையை சட்​டப்​பேர​வை​யில்​தான் நிரூபிக்க வேண்​டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்​ஆர் பொம்மை வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் தெளி​வாகச் சொல்​லி​யிருக்​கிறது.

இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர். மேலும், நடிகர் பிர​காஷ் ராஜ், விஷால் ஆகியோ​ரும் விஜய்க்கு ஆளுநர் வாய்ப்​பளிக்​க வேண்​டும்​ என வலியுறுத்தியுள்ளனர்.