惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
N
Netflix TechBlog - Medium
GbyAI
GbyAI
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 三生石上(FineUI控件)
T
Tailwind CSS Blog
IT之家
IT之家
博客园 - Franky
雷峰网
雷峰网
博客园 - 聂微东
腾讯CDC
M
MIT News - Artificial intelligence
B
Blog RSS Feed
博客园_首页
罗磊的独立博客
S
SegmentFault 最新的问题
I
InfoQ
博客园 - 叶小钗
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker
宝玉的分享
宝玉的分享
B
Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பங்குச் சந்தை முதலீட்டாளருக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோ...
2026-05-13 · via hindutamil

Updated on

1 min read

மும்பை: இந்​திய பங்​குச் சந்​தைகள் நேற்று கடுமை​யாக சரிவடைந்​தது. இதன்​மூலம் முதலீட்​டாளர்​களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டது.

கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் ரூபாய் மதிப்பு சரிவு காரண​மாக இந்​திய பங்​குச் சந்​தைகள் இந்த வாரத்​தின் முதல் நாளான திங்​கள்​கிழமை சரிவை சந்​தித்​தது. இந்​நிலை​யில் 2-வது நாளான நேற்​றும் கடும் வீழ்ச்​சி​யடைந்​தது. வர்த்தக முடி​வில் மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் 1,456 புள்ளிகள் சரிந்து 74,559-ல் நிலை பெற்​றது.

சரிவுக்​கான 5 முக்​கிய காரணங்​கள்

தேசிய பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் நிப்டி 436 புள்​ளி​கள் சரிந்து 23,379-ல் நிலை பெற்​றது. இதன்​மூலம் முதலீட்​டாளர்​களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டது. சந்தை​யின் இந்​தச் சரிவுக்கு மிக முக்​கிய​மான காரணங்​களில் ஒன்​று, அமெரிக்கா - ஈரான் இடையி​லான மோதலில் மீண்​டும் ஏற்பட்​டுள்ள நிச்​சயமற்ற தன்​மை​யாகும்.

மோதலை முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​காக வாஷிங்​டன் முன்வைத்த சமீபத்​திய திட்​டத்தை ஈரான் நிராகரித்​ததைத் தொடர்ந்​து, அந்​நாட்​டுட​னான போர்​நிறுத்த ஒப்​பந்​தம் 'உயிர்காக்கும் கரு​வி' உதவி​யுடன் ஊசலாடிக் கொண்​டிருப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​தார். குறிப்​பாக, ஹார்​முஸ் ஜலசந்தி மீதான இறை​யாண்மை மற்​றும் போர் இழப்பீடு போன்ற ஈரானின் நிபந்​தனை​களை அமெரிக்கா ஏற்க மறுத்​துள்​ளது.

மத்​திய கிழக்கு நாடு​களில் போர் பதற்​றம் தணி​யாத​தால், கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​படும் என்ற அச்​சம் எழுந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை ஒரு பேரலுக்கு 105 டாலர் என்ற அளவை மீண்​டும் தாண்​டி​யுள்​ளது. இது எரிபொருளை இறக்​குமதி செய்​யும் இந்​தி​யா​வைப் போன்ற நாடுகளுக்​குப் பெரும் சுமை​யாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் 95.55 ஆக வீழ்ச்​சி​யடைந்​தது.

கச்சா எண்​ணெய் விலை உயர்வு இந்​தி​யா​வின் பொருளாதாரத்தைப் பாதிக்​கும் என்ற கவலையே இதற்கு முக்கிய காரணம். அமெரிக்​கா​வின் 10 ஆண்​டு​கால கடன் பத்​திர லாபம் 4.423% ஆக உயர்ந்​துள்​ளது. கடன் பத்​திரங்​களில் லாபம் அதி​கரிக்​கும்​போது, முதலீட்​டாளர்​கள் பங்​குச்​சந்​தை​யில் இருந்து பணத்தை எடுத்து பாது​காப்​பான பத்​திரங்​களில் முதலீடு செய்​யத் தொடங்​கு​வார்​கள். இது பங்​குச்​சந்​தைக்கு அழுத்​தத்​தைக் கொடுக்​கிறது.

வெளி​நாட்டு நிறுவன முதலீட்​டாளர்​கள் (எப்​ஐஐ) தொடர்ந்து இந்தியப் பங்​கு​களை விற்று வரு​கின்​றனர். கடந்த திங்​கட்​கிழமை மட்​டும் சுமார் ரூ.8,438 கோடி மதிப்​பிலான பங்​கு​களை அவர்​கள் விற்​றுள்​ளனர்​. இது தொடர்​ந்​து ஐந்​​தாவது வர்​த்​தக தின​மாக நீடிக்கிறது. இது​போன்​ற ​காரணங்​களால்​ இந்​தி​ய பங்​குச்​ சந்தைகள்​ கடும்​ சரிவை சந்​தித்​து வருகின்​றன.