惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Microsoft Security Blog
Microsoft Security Blog
Recent Announcements
Recent Announcements
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
罗磊的独立博客
腾讯CDC
云风的 BLOG
云风的 BLOG
月光博客
月光博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
宝玉的分享
宝玉的分享
U
Unit 42
I
InfoQ
D
DataBreaches.Net
Blog — PlanetScale
Blog — PlanetScale
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
V2EX
美团技术团队
IT之家
IT之家
Stack Overflow Blog
Stack Overflow Blog
F
Fortinet All Blogs
GbyAI
GbyAI
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப், ஈரான் சபாநாயக...
டெக்ஸ்டர் · 2026-06-16 · via hindutamil

Updated on: 

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆன்லைன் மூலமாக கையெழுத்திட்டுள்ளன. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் இந்த தொடக்கநிலை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரபூர்வ கையெழுத்து நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் உலக நாடுகளுக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் உச்ச தலைவரின் முழுமையான ஆதரவுடனேயே சபாநாயகர் காலிபாஃப் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு தாக்குதல்களுக்குப் பிறகு, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருந்தது. இந்த அமைதி ஒப்பந்தத்தின் உடனடி விளைவாக, ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து தொடங்கவுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பாவிட்டாலும், வரும் நாட்களில் போக்குவரத்து பலமடங்கு அதிகரிக்கும் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது. 

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதி ஆதாரங்களை விடுவிக்கவும், அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளைத் தளர்த்தவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், பரந்த அளவிலான சலுகைகளை வழங்குவதற்கு முன்பாக, ஈரான் தனது அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. 

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் தனியாகத் தொடரும் என்றும், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறுவது இந்த ஒப்பந்தத்திற்கான நிபந்தனை அல்ல என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.