


























இதையடுத்து, பிரதமர் மோடி உட்பட முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டன. அந்த வரிசையில், தமிழக ஆளுநர் அர்லேகருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப் பட்டுள்ளது.
இது குறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அலுவல் ரீதியாகவும், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் பயணங்களின் போதும் 10 காவல் துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
தற்போது, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள 7 வேண்டுகோள்களில் ஒன்றான 'பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைத்து பொது போக்குவரத்தை உபயோகிக்க வேண்டும்' என்பதை கருத்தில் கொண்டு, ஆளுநரின் அறிவுறுத்தலின் படி, அவருக்கு தரப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。