惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 【当耐特】
博客园_首页
The GitHub Blog
The GitHub Blog
月光博客
月光博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 三生石上(FineUI控件)
D
Docker
Stack Overflow Blog
Stack Overflow Blog
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Vercel News
Vercel News
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
雷峰网
雷峰网
小众软件
小众软件
I
InfoQ
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
S
SegmentFault 最新的问题
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு: விலைவாசி உயர்வுக்கு எச்...
2026-05-20 · via hindutamil
வீரமணி சுந்தரசோழன்

Updated on

2 min read

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், நாட்டில் விலைவாசி மேலும் கடுமையாக உயரும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 109 அமெரிக்க டாலர் அளவில் உள்ளது. இதனால் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பதோடு, நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில்தான், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை அன்று 96.91 என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. ரூபாயின் மதிப்பு இன்னும் சரியக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஈரான் உடனான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி தற்காலிகமாக மூடப்பட்டதால் உலக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கணிசமாக உயர்ந்துள்ளன. உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் சுமார் 34% (தினசரி 1.5 கோடி பேரல்கள்) ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கடந்து செல்கிறது. இதில் 90% சீனா மற்றும் இந்தியா உட்பட ஆசிய நாடுகளுக்குச் செல்கிறது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக எரிபொருள் இறக்குமதியை சார்ந்துள்ள இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தினமும் சுமார் 5.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயைப் பயன்படுத்துகிறது. கச்சா எண்ணெய் கடுமையாக விலை உயர்ந்துள்ளதால், இப்போது கூடுதல் டாலர்களை இந்தியா செலவழிக்க வேண்டியுள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கு அதிகமானவற்றை இறக்குமதி செய்வதால், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வானது இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அமெரிக்க டாலரில் வாங்கப்படுவதால், ரூபாயின் மதிப்பு பலவீனமடையும்போது இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கிறது.

இதுபோன்ற காரணங்கள் ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளன. ரூபாயின் மதிப்பு குறைவது ஏற்றுமதிக்கு சாதகமாக சொல்லப்பட்டாலும், ஏற்றுமதியை விட அதிக அளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாட்டில், ரூபாயின் மதிப்பு குறைவது உள்நாட்டு விலையேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 சதவீதம் சரிந்துள்ளது. இதன் காரணமாக நாம் இறக்குமதி செய்யும் ஒவ்வொரு பொருளின் விலையும் குறைந்தபட்சம் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவே நாட்டில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில்தான் மிகவும் அத்தியாவசியமான டாலர் கையிருப்பு கரைந்து போவதைத் தடுக்கும் வகையில், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும், தங்கம் வாங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் இந்தியர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதுடன், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. எரிபொருள் விலை உயர்வு காரணமாக, கடந்த சில நாட்களிலேயே நாட்டில் அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் கணிசமாக அதிகரித்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், மற்றொருபுறம் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் இருந்து அதிகம் வெளியேறுவதும் முக்கிய காரணமாக உள்ளது.

1990-களில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான நாடாக இந்தியா இருந்து வருகிறது. இருப்பினும், கடந்த இரண்டு நிதியாண்டுகளாக, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறி வருகிறது. வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 2026-ஆம் ஆண்டில் இதுவரை 22.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியப் பங்குகளையும் பத்திரங்களையும் விற்றுள்ளனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, இந்தியப் பெரு நிறுவனங்களும் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறி அதிகளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றன. இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் சுமார் 30 முதல் 35 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற காரணிகளே ரூபாய் மதிப்பு சரிவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மார்ச் 30 அன்று, இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும், மற்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தபோது, ​டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சுமார் 94-ஐ தொடும் நிலையில் இருந்தது. அதன்பிறகு, நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதன் காரணமாக கச்சா எண்ணெய், நிலக்கரி உட்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெரிய அளவில் உயரும். இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களை சார்ந்துள்ள அனைத்துப் பொருட்களின் விலையும் நாட்டில் கடுமையாக உயர வழிவகுக்கும்.

இப்போதைய சூழலில், ரூபாயின் மதிப்பு மேலும் சரியும் என்றே பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலையும் இனி படிப்படியாக உயரும். இது நாட்டின் பொருளாதாரம் மீது அழுத்தத்தை உருவாக்குவதுடன், மக்களின் மீதான சுமையையும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவது, பணவீக்கத்தை அதிகரித்து விலைவாசி உயர்வு என நேரடியாகவும், வரிகளாக மறைமுகமாகவும் பல்வேறு தாக்கங்களை இனி வரும் நாட்களில் உருவாக்கும் என எச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். மக்களின் மீதான சுமையை குறைக்க அரசும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியும் என்ன செய்யப்போகிறது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.