惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
Martin Fowler
Martin Fowler
N
Netflix TechBlog - Medium
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
D
Docker
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Security Blog
Microsoft Security Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
I
InfoQ
J
Java Code Geeks
博客园 - 聂微东
大猫的无限游戏
大猫的无限游戏
Engineering at Meta
Engineering at Meta
美团技术团队
小众软件
小众软件
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்தியா - இத்தாலி உறவு: பிரதமர் மோடி விவரித்தது என்ன?
2026-05-20 · via hindutamil

Updated on

1 min read

ரோம்: இந்தியா - இத்தாலி இருதரப்பு உறவை சிறப்பு உத்திசார் கூட்டாண்மை (Special Strategic Partnership) நிலைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழு, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான குழுவினரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடியும், பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியா - இத்தாலி கூட்டு உத்திசார் செயல் திட்டம் 2025-2029, இருதரப்பு உறவுகளுக்கு நடைமுறைக்கு ஏற்ற கட்டமைப்பை வழங்குகிறது. ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினோம். இந்தியா - இத்தாலி புத்தாக்க மையத்தை நிறுவுவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இந்தியா - இத்தாலி பாதுகாப்புத் தொழில்துறை செயல் திட்டம், ராணுவ தளவாட கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தி ஆகியவற்றுக்கு வழி வகுத்துள்ளது. கப்பல் போக்குவரத்து, துறைமுக நவீனமயமாக்கல், தளவாடங்கள், நீலப் பொருளாதாரம் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். பிரதமர் மெலோனியின் தலைமையின் கீழ் இருதரப்பு உறவுகள் புதிய உத்வேகத்தையும் திசையையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளன.

உக்ரைன், மேற்கு ஆசியா மற்றும் பிற உலகளாவிய பதட்டங்கள் தொடர்பாக இந்தியாவும் இத்தாலியும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றன. அனைத்துப் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை மனிதகுலத்துக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலாகக் கருதுவதில் இரு நாடுகளும் ஒன்றுபட்டுள்ளன.

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதற்கு எதிரான எங்களின் கூட்டு முயற்சிகள் ஒரு முக்கிய உலகளாவிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன. பொறுப்புள்ள ஜனநாயக நாடுகள் பயங்கரவாதத்தைக் கண்டிப்பதோடு, அவற்றின் நிதி வலையமைப்புகளைத் தகர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இத்தாலி அதன் வடிவமைப்பு மற்றும் துல்லியத்துக்காக உலகளவில் அறியப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியா அதன் மக்கள் தொகை, திறமை, மலிவு விலை புத்தாக்கத்தின் வலிமை ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது. இந்தியாவிலும் இத்தாலியிலும் வடிவமைத்து உருவாக்கி உலக்கு வழங்குதல் என்ற கொள்கையுடன் இரு நாடுகளும் முன்னேறும்.

இந்தியாவும் இத்தாலியும் தங்கள் உறவுகளை ஒரு சிறப்பு உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தி வருகின்றன. இருதரப்பு உறவுகள் இப்போது அவற்றின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு, மரியாதை மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது” என தெரிவித்தார்.