惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
爱范儿
爱范儿
小众软件
小众软件
月光博客
月光博客
A
About on SuperTechFans
S
SegmentFault 最新的问题
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
Y
Y Combinator Blog
F
Fortinet All Blogs
博客园_首页
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
C
Check Point Blog
L
LangChain Blog
博客园 - 叶小钗
D
DataBreaches.Net
量子位
IT之家
IT之家
U
Unit 42
博客园 - 聂微东
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கடையநல்லூர் தொகுதியில் கரையேறப் போவது யார்?
செய்திப்பிரிவு · 2026-04-16 · via hindutamil

Updated on:

தென்காசி: கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 1,32,228 ஆண்கள், 1,35,272 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் என மொத்தம் 2,67,517 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 364 வாக்குச்சாவடிகள் உள்ளன. முஸ்லிம்கள் அதிகமாகவும், அதற்கு அடுத்தபடியாக முக்குலத்தோர், நாடார், யாதவர், நாயக்கர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் அதிகமாக உள்ளனர்.

கருப்பாநதி அணையை தூர்வார வேண்டும், விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்டவை இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. கடையநல்லூர் தொகுதியில் மதிமுக சார்பில் தி.மு.ராஜேந்திரன் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, தவெக சார்பில் அப்துல் ஜலீல், நாதக சார்பில் அபூபக்கர் சித்திக் மற்றும் பல்வேறு கட்சிகள், சுயேச்சைகள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் தி.மு.ராஜேந்திரன், மதிமுக துணை பொதுச் செயலாளராக உள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களைச் சொல்லி பிரச்சாரம் செய்யும் இவர், கடையநல்லூர் தொகுதியிலேயே தங்கியிருந்து அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

மதிமுக வேட்பாளர் தி.மு.ராஜேந்திரன்

மதிமுக வேட்பாளர் தி.மு.ராஜேந்திரன்

கடையநல்லூர் தொகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்கப்படும், வனவிலங்கு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும், தேங்காய் உலர் களம் அமைக்கப்படும், நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, இந்த தொகுதியில் தனது முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

கடந்த முறை திமுக அரசு தனது சில கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்றும், மீண்டும் வெற்றி பெற்றதும் கடையநல்லூருக்கு போதுமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தென்காசி மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்றும் வாக்கு சேகரிக்கிறார். மேலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை கூறி பிரச்சாரம் செய்கிறார்.

தவெக வேட்பாளர் அப்துல் ஜலீல்

தவெக வேட்பாளர் அப்துல் ஜலீல்

தவெக வேட்பாளர் அப்துல் ஜலீல், விவசாயிகளுக்காகவும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியதாகக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற பாடுபடுவதாகக் கூறி பிரச்சாரம் செய்கிறார். முஸ்லிம்களுக்கு திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டும் இவர், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அரணாக தவெக இருக்கும் என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபூபக்கர் சித்திக் கடையநல்லூர் தொகுதியில் தென்னை, வாழை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், வன விலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், விவசாய பயிர்கள் சேதத்துக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

நாதக வேட்பாளர் அபூபக்கர் சித்திக்

நாதக வேட்பாளர் அபூபக்கர் சித்திக்

இத்தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இஸ்லாமியர்கள் ஓட்டு உள்ளது. இதனால் இஸ்லாமியர்களின் ஓட்டுகளை குறிவைத்து வேட்பாளர்கள் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தவெக, நாதக வேட்பாளர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் இந்த முறை வெற்றி பெறுவது யார்?, இஸ்லாமியர்களின் ஓட்டுகளை அதிகமாக யார் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.