

























Updated on:
மதுரை: மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸை, சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை கைது செய்துள்ளனர்.
மதுரையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்புப் பகுதிக்கு அருகே வசிக்கிறார் யூடியூபர் மாரிதாஸ். இவர் விஜய் தலைமையிலான தவெக அரசு மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், சில வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வந்துள்ளார்.
இவ்வாறாக தவெக அரசுக்கு எதிராகப் பேசி வந்த யூடியூபர் மாரிதாஸ் மீது சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து மதுரையில் இருந்த மாரிதாஸை கைது செய்ய இன்று காலை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மதுரை வந்தனர்.
இந்நிலையில், மதுரை கே.புதூர் போலீஸார் உதவியுடன் மாரிதாஸ் வசிக்கும் வீட்டைச் சுற்றி வளைத்த சென்னை சைபர் க்ரைம் போலீஸார், அதிரடியாக வீட்டுக்குள் புகுந்த யூடியூபர் மாரிதாஸை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸை சென்னைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。