惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
J
Java Code Geeks
小众软件
小众软件
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Hugging Face - Blog
Hugging Face - Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
C
Check Point Blog
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - Franky
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
G
Google Developers Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
大猫的无限游戏
大猫的无限游戏
量子位
M
MIT News - Artificial intelligence
Last Week in AI
Last Week in AI
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகம் முழுவதும் உள்ள 62 மையங்களிலும் மே 4 காலை 8 மணிக்க...
2026-04-28 · via hindutamil

சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீலிடப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய வீரர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். (கோப்புப் படம்)

Updated on

2 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்​ணும் மையங்​களில் வாக்கு எண்​ணும் பணி மே 4-ம் தேதி காலை 8 மணிக்​குத் தொடங்​கும். தபால் வாக்​கு​கள் எண்ணி முடிக்​கப்​பட்ட பிறகே, மின்​னணு இயந்​திரங்​களில் இறுதி சுற்று வாக்கு எண்​ணிக்கை தொடங்​கும். இத்​தேர்​தலில் மொத்​தம் 8.15 லட்​சம் பேர் தபால் வாக்கு செலுத்​தி​யுள்​ளனர் என்று தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. அரசி​யல் கட்சி வேட்​பாளர்​கள், சுயேச்​சைகள் என மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்​டுள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்​கத் தகுதி பெற்​றிருந்த நிலை​யில், 4.88 கோடி வாக்​காளர்​கள் (85.10 சதவீதம்) வாக்​களித்​தனர்.

தமிழக தேர்​தல் வரலாற்​றில் கடந்த 2011 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதி​வான 78 சதவீத வாக்​குப்​ப​திவு​தான் அதி​கபட்​ச​மாக இருந்​தது. இந்த நிலை​யில், சிறப்பு தீவிர திருத்த (எஸ்​ஐஆர்) பணி​யின்​போது, உயி​ரிழந்​தவர்​கள், முகவரி மாறிய​வர்​கள், இரட்​டைப் பதிவு உள்​ளவர்​களின் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டதை தொடர்ந்​து, தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்​தது.

அதி​கபட்​ச​மாக கரூரில் 93.41 சதவீத​மும், வீர​பாண்​டி​யில் 93.36 சதவீத​மும் வாக்​கு​கள் பதி​வாகின. 45 தொகு​தி​களில் 90 சதவீதத்​துக்கு மேல், 151 தொகு​தி​களில் 80 சதவீதத்​துக்கு மேல், 37 தொகு​தி​களில் 70 சதவீதத்​துக்கு மேல் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. பாளை​யங்​கோட்டை தொகு​தி​யில் மட்​டுமே வாக்​குப்​ப​திவு 70 சதவீதத்​தை​விட குறை​வாக (68.97 சதவீதம்) பதி​வானது.

இத்​தேர்​தலில் 75,064 வாக்​குச்​சாவடிகளில் 1.06 லட்​சம் வாக்​குப்​பதிவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. 23-ம் தேதி மாலை 6 மணிக்கு வாக்​குப்​ப​திவு முடிந்​ததும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் அனைத்​தும் சீலிடப்​பட்​டு, தமிழகம் முழு​வதும் வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்ள 62 மையங்​களில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன.

இங்கு 4 அடுக்கு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் தின​மும் 2 முறை​யும், மாவட்​டத் தேர்​தல் அதி​காரி​கள் ஒரு​முறை​யும் நேரில் பார்​வை​யிட வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. சிசிடிவி மூல​மாக​வும் பாது​காப்பு அறை​கள்24 மணி நேர​மும் தொடர்ந்து கண்​காணிக்​கப்​படு​கின்​றன. சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்​தல் அதி​காரி அலு​வல​கத்​தில் இருந்​தும் கேமரா காட்​சிப் பதிவு​கள் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்றன.

இந்​நிலை​யில், மே 4-ம் தேதி நடை​பெற உள்ள வாக்கு எண்​ணும் பணி தொடர்​பாக தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்ட மொத்​தம் 3.60 லட்​சம் அலு​வலர்​களில், வாக்​காளர்​களாக பதிவு செய்​து, வாக்​களிக்க விண்​ணப்​பித்த 2.88 லட்​சம் அலு​வலர்​கள் (80%) தபால் வாக்​கு​களைப் பதிவு செய்​துள்​ளனர்.

தேர்​தல் பணிக்​காக நியமிக்​கப்​பட்ட காவல் துறை சார்ந்த அலு​வலர்​கள், மற்ற தேர்​தல் பிரிவு​களில் பணிபுரிந்த அலு​வலர்​கள், தேர்​தல் கண்​காணிப்பு குழுக்​களில் பணி​யாற்​றிய அலு​வலர்​களும் சேர்த்து மொத்​தம் 3.36 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களாக​வும், 1.10 லட்​சம் அலு​வலர்​கள் தேர்​தல் பணி சான்​றிதழ் பெற்று நேரடி​யாக வாக்​குச்​சாவடி​யிலும் வாக்​களித்​துள்​ளனர்.

படிவம் 12-டி விண்​ணப்​பத்​தின் அடிப்​படை​யில், மாற்​றுத் திற​னாளி​கள், 85 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​கள் என மொத்​தம் 1.73 லட்​சம் வாக்​காளர்​கள் தபால் வாக்கு பெற்று வாக்​களித்​துள்​ளனர். இதுத​விர, ராணுவத்​தினர், பாது​காப்பு படை​யினர் உள்​ளிட்ட சேவைத் துறை​யில் உள்ள 18 ஆயிரம் பேர் வாக்​களித்​துள்​ளனர். இவர்​களது தபால் வாக்​கு​கள் மே 4-ம் தேதி காலை 8 மணி வரை பெறப்​படும். அந்த வகை​யில், மொத்​தம் 8.15 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களை பதிவு செய்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், வாக்கு எண்​ணும் பணி மே 4-ம் தேதி, மாநிலம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்​ணும் மையங்​களில் சரி​யாக காலை 8 மணிக்கு தொடங்​கும்.

ஒவ்​வொரு மையத்​தி​லும் ஒரு பகு​தி​யில் தபால் வாக்​கு​களும், மற்​றொரு பகு​தி​யில், வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதி​வான வாக்​கு​களும் அதற்​குரிய மேஜைகளில் எண்​ணப்​படும். இதை மேற்​பார்​வை​யிட உதவி தேர்​தல் நடத்​தும் அலு​வலர் நிலை​யில் அதி​காரி​கள் தனித்​தனியே நியமிக்​கப்​படு​வார்​கள். ஒரு மேஜைக்கு 500 வாக்​கு​கள் என்ற விகிதத்​தில் தபால் வாக்​கு​கள் எண்​ணப்​படும்.

முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்​கு​கள் எண்​ணும் பணி தொடங்​கும். மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதி​வான வாக்​கு​கள் எண்​ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடை​பெறும். எனினும், இதன் கடைசி சுற்​று வாக்​கு எண்​ணும்​ பணி, தபால்​ வாக்​கு​கள்​ எண்​ணி முடிக்​கப்​பட்​ட பிறகு​தான்​ தொடங்​கும்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.