惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
Vercel News
Vercel News
H
Help Net Security
Martin Fowler
Martin Fowler
美团技术团队
云风的 BLOG
云风的 BLOG
Y
Y Combinator Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
MyScale Blog
MyScale Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
MongoDB | Blog
MongoDB | Blog
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஒலிம்பிக் போட்டி நடத்துவது இந்தியாவின் ஆசை: நெதர்லாந்து இ...
2026-05-17 · via hindutamil

Updated on

1 min read

தி ஹாக்: ஒலிம்​பிக் போட்டி நடத்​து​வது, உலக உற்​பத்தி மைய​மாக இருப்​பது உட்பட இந்​தி​யா​வுக்கு மிகப் பெரிய ஆசைகள் உள்ளன என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் மோடி 5 நாடு​கள் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். முதல் நாடாக ஐக்​கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி எல்​பிஜி, கச்சா எண்​ணெய் விநி​யோகம், சேமிப்பு தொடர்​பான ஒப்​பந்​தங்​களை மேற்​கொண்​டார். அங்​கிருந்து அவர் நெதர்​லாந்து சென்​றார். தி ஹாக் நகரில்

அங்​குள்ள இந்​தி​யர்​கள் பிரதமர் மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். அவர்​களிடம் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: வளர்ச்​சி​யடைந்த நாடு​கள் போல், ஒலிம்​பிக் போட்​டியை நடத்த இந்​தி​யா​வும் விரும்​பு​கிறது. அதே​போல் உலகளா​விய உற்​பத்தி மைய​மாகவும் பசுமை எரிசக்தி மைய​மாக​வும் உலக பொருளா​தார வளர்ச்சி மைய​மாக​வும் இருக்க இந்​தியா விரும்​பு​கிறது.

இந்​தி​யா​வின் ஆசைகள், எண்​ணங்​கள், முயற்​சிகளுக்கு எல்​லையே இல்​லை. எல்லா பொருட்​களும் ‘மேக் இன் இந்​தி​யா’-​வாக இருப்​ப​தற்கு தேவை​யான நடவடிக்​கைகளை நாங்​கள் எடுக்​கிறோம். இதன் மூலம் இந்​தியா உலகளா​விய உற்​பத்தி மைய​மாக மாறும்.

இந்​திய இளைஞர்​கள் நவீன தொழில்​நுட்​பத்​தில் சிறந்து விளங்​கு​கின்​றனர். அவர்​களின் ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​கள் வளர்ச்​சி​யடைந்து வரு​கின்​றன. செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) பாது​காப்​பு, விண்​வெளித் துறை ஆகிய அனைத்​தி​லும் சிறப்​புடன் செயல்​படும் இந்​திய இளைஞர்​களுக்கு நன்​றி. இந்​தியா செமி கண்​டக்​டர் மைய​மாக மாறி வரு​கிறது. தற்​போது 12 செமி கண்​டக்​டர் மையங்​கள் இந்​தி​யா​வில் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. இவற்​றில் இரண்​டில் உற்​பத்தி ஏற்​கெனவே தொடங்​கி​விட்​டது. தற்​போது கம்ப்​யூட்​டர் சிப்​ஸ்​கள் இந்​தி​யா​வில் வடிவ​மைக்​கப்​பட்டு வரு​கின்​றன. செல்​போன் உற்​பத்​தி​யில் புரட்சி ஏற்​பட்​டு, உலக செல்​போன் உற்​பத்​தி​யில் இந்​தியா 2-வது பெரிய நாடாக உள்​ளது.

மிகப் பெரிய ஏஐ உச்சி மாநாடு இந்​தி​யா​வில் கடந்​தாண்டு வெற்​றிகர​மாக நடை​பெற்​றது. பசுமை எரிசக்தி உற்​பத்​தியை அதி​கரிக்க எனது ஆட்​சி​யில் சிறப்பு கவனம் செலுத்​தப்​படு​கிறது. இந்​தி​யா​வில் அமைக்​கப்​படும் சோலார் பூங்​காக்​கள் உலகின் மிகப் பெரிய சோலார் பூங்​காக்​களில் ஒன்​றாக உள்​ளன.

புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி உற்​பத்​தி​யில் பிரேசிலை பின்​னுக்கு தள்ளி இந்​தியா 3-ம் இடம் பிடித்​துள்​ளது. அடுத்த 2036-ம் ஆண்டு இந்​தி​யா​வில் ஒலிம்​பிக் போட்டி நடத்த திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது. இதற்​காக நெதர்​லாந்​துடன்​ கிரிக்​கெட்​ மற்​றும்​ ஹாக்​கி விளை​யாட்​டு போட்​டிகளில்​ ஒத்​துழைப்​புடன்​ செயல்​பட இந்​தி​யா விரும்​பு​கிறது. இவ்​​வாறு அவர்​ கூறி​னார்​.