
























தனது மனைவியின் உயிரை காப்பாற்றித் தருமாறு, காமெடி நடிகர் முத்துக்காளை, முதல்வர் விஜய்க்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘என் மனைவி மாலதி (47) மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக, கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கிருமி நோய்த் தொற்றால், நினைவின்றி இருக்கும் அவருக்கு மேல் சிகிச்சைக்காக உதவ வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து முதல்வர் விஜய், உடனடியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தொலைபேசியில் பேச வைத்தார். மருத்துவமனைக்கு அமைச்சர் ராஜ் மோகனை நேரடியாக அனுப்பி, உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。